உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72 ||

அப்பாத்துரையம் - 33

திருடர்கள் கனவு கண்டவர்கள் போல விழித்தார்கள், ஏனென்றால், ஓடி வந்த முயலே அங்கே படுத்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். அத்துடன் ஏழு பேர்க்கும் போதிய அளவு கத்தரிக்காய்க் குழம்பும் புளிச் சோறும் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது.

திருடர்கள் தமக்குள் பேசிக் கொண்டனர். திம்மப்பன் பழைய செய்திகளையோ, செல்வியின் வேலையையோ அவர்கள் இப்போது எண்ணவே இல்லை. அவற்றை எல்லாம் மறந்து விட்டனர். அவர்கள் ஒரே ஆவல் இப்போது முயலைப் பற்றியது தான். அதை எப்படியாவது பெற வேண்டுமென்று அவர்கள் துடித்தார்கள்.

"திம்மப்பனிடம் இனி எதையும் தட்டிப் பறிக்க முடியாது. மைத்துன உரிமையிலேயே இதைப் பெற வேண்டும்" என்று அவர்கள் திட்டமிட்டனர்.

அவர்கள் திம்மப்பனிடம் இனிமையாகப் பொழுது போக்கினர். இறுதியில் முயலின் பேச்செடுத்தனர். திம்மப்பன், "உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பேன். என் ஒரே செல்வமான முயலைக் கொடுக்க மாட்டேன்” என்றான்.

அவர்கள் விலை பேசினர். நூறு பொன் தருவதாகச் சொன்னார்கள். அவன் எழுநூறு பொன் கேட்டான். சிறிது நேரம் சென்றால் எங்கே மனம் மாறிவிடுவானோ என்று அஞ்சி அவர்கள் எழுநூறு பொன்னை எண்ணிக் கொடுத்தனர். பின் பெரு மகிழ்ச்சியுடன் முயலைப் பெற்றுக் கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.

வழியில் அவர்கள் சிறிது தங்கி இளைப்பாறினர். அப்போது அவர்களுக்கு முயலின் நினைவு வந்தது. தலை மூத்த திருடன் அதை எடுத்துத் தன் மனைவியிடம் தூதனுப்பினான். "அம்மாவிடம் போய், நாங்கள் வருகிறோம். எல்லாருக்கும் சுண்டைக்காய்க் குழம்பும், பருப்புச் சோறும் செய்து வைக்கும்படி சொல்லு” என்று காதில் கூறி, அதைக் கீழே விட்டான். எதிர்பார்த்தபடியே அது காற்று வேகத்தில் பறந்தது.

வீட்டுக்குப் போனபோது, யாரும் அவர்களை எதிர் பார்த்திருந்ததாகத் தெரியவில்லை. ஏழு பேருடைய மனைவியரும்