உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

71

அவன் காதோடு காதாகத் தன் திட்டத்தை அவளிடம் கூறினான்.“ஆகா! நல்ல திட்டம்” என்று அவள் சிரித்தாள்.

எதிர்

மற்ற முயலுடன் திம்மப்பன் திருடர்களை கொண்டழைத்தான். சூதறியாதவன்போல அவர்களிடம் மைத்துன முறையுடன் பேசினான்.

“செல்வி அங்கே வர ஒவ்வொரு நாளும் துடி துடிக்கிறாள். னால், நான்தான் நாள் கடத்தி வருகிறேன். நீங்கள் வந்து அழைத்தால் போகலாம் என்று! வாருங்கள். வீட்டுக்குப் போகலாம்!” என்று அவன் அவர்களை அழைத்தான்.

அவர்கள் வேறு வழி காணாமல், ஒத்துக்கொண்டனர்.

ஆனால், இந்தச் சமயம் அவன் தன் முயலைக் கையில் எடுத்தான்."அடே வெள்ளை! நீ அம்மாவிடம் போய், கத்தரிக் காய்க் கறியும், புளிச்சோறும் செய்து வைக்கச் சொன்னதாகச் சொல்லு. மைத்துனர் ஏழுபேரும் வந்திருப்பதாகவும் சொல்லு' என்று முயலின் காதில் சற்று உரத்துக் கூறிக் கீழே விட்டான்.

விடுபட்ட முயல் காட்டுக்குள் ஓடிற்று.

திருடர்கள், "இது

>>

என்ன பைத்தியம்? பைத்தியம்? முயலிடம் தூதனுப்புகிறான். முயல் வீட்டுக்குப் போகுமா, பேசுமா?” என்று தமக்குள் எண்ணிக் கொண்டார்கள்.

வீட்டுக்குப் போனதும் திம்மப்பன் மனைவி, அவர்களை எதிர் கொண்டழைத்தாள்.

"நான் சொன்னபடி முயல் வந்து செய்தி தெரிவித்த தல்லவா?” என்று அவன் கேட்டான்.

ஆகா, அது தெரிவித்ததால்தானே, நான் இதற்குள் கத்தரிக்காய்க் கறியும், புளிச்சோறும் சமைத்து வைத்திருக்கிறேன். முயல்கூட ஓடி வந்த களைப்பில் அதோ படுத்திருக்கிறது, பாருங்கள்" என்றாள்.

அங்கே முயல் ஓடி வந்த களைப்பினால் படுத்திருப்பது போலவே படுத்துத் தூங்கிற்று.

ஆனால்,அது ஓடி வந்த முயலல்ல. அதனுடன் சோடியாகத் திம்மப்பன் பிடித்து, முன்பே வீட்டில் கட்டிப் போட்டிருந்த முயலே அது.