உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

|-

அப்பாத்துரையம் - 33

"நான் செய்தது தவறு தான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை அண்டிப் பிழைப்பவள். அவர்களுக்கு நான் உடந்தை யாயில்லா விட்டால் எப்படி வாழ்வேன்?” என்றாள்.

"சரி, அப்படியானால், இனி நீ செய்யப் போவது என்ன?” என்றான் திம்மப்பன்.

அவள் சிறிது சிந்தித்தாள். அவள் திருடருடன் வாழ்ந்தாலும், அவர்களுடன் முழுவதும் ஒன்றுபட்டு விடவில்லை. அத்துடன் அவள் கூரிய அறிவும் நல்லெண்ணமும் உடையவளாயிருந்தாள், அவள் விரைவில் ஒரு முடிவுக்கு வந்தாள்.

னி

“நான் உங்கள் மனைவியாக நடித்தேன். இனி மனைவி யாகவே இருக்கிறேன். ஆனால், அவர்களை நினைத்தால் அச்சமாயிருக்கிறது" என்றாள்.

66

"அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்

திம்மப்பன்.

செல்வி பணப்பையுடன் திரும்பி வருவாள் என்று திருடர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக்கொண்டே ருந்தார்கள். நாட்கள் ஏழாகியும் அவள் திரும்பி வரவில்லை. அவர்கள் அவளைத் தேடிப் புறப்பட்டனர்.

அவர்கள் நடமாட்டத்திலேயே திம்மப்பன் கண்ணுங் கருத்து மாயிருந்தான்.அவர்களை மறுபடியும் ஏய்க்க அவன் புதுத் திட்டம் வகுத்தான்.

அவன் முயல்களுக்கான பொறி வைத்துச் சில முயல்கள் பிடித்தான்.கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரண்டு முயல்களை வைத்துக்கொண்டு மற்றவற்றைத் துரத்தி விட்டான். தன் மனைவி யான செல்வியிடம், "உன் அண்ணன்மார்கள் வருகிறார்கள். உன் அண்ணன் மார்களாகவே நான் அவர்களை நடத்தப் போகிறேன். நீ இன்று அவர்களுக்கு கத்தரிக் காய்க்கறியும், புளி சோறும் செய்து வை, நான் அவர்களை எதிர் கொண்டு அழைத்து வருகிறேன்” என்றான்.

மனைவி அப்படியே சமைத்து வைத்திருந்தாள்.

ஒரு முயலை அவன் துணியில் கட்டி வைத்தான். “எதற்காக இந்த முயல்?” என்று செல்வி கேட்டாள்.