உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

66

69

'என்னை உங்கள் தங்கை என்று சொல்லி, அவனுக்கு மணம் செய்து கொடுங்கள். நான் மனைவியாக அவனுடன் சமயம் பார்த்துப் பணத்துடன் ஓடி வந்து விடுகிறேன்"

சென்று, என்றாள்.

66

இது நல்ல வேடிக்கையான திட்டம்தான்" என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டனர்.

தலை மூத்த திருடன் திம்மப்பனை அணுகினான். பாலோடும் பழம் சேர்ந்தாற்போல இனிமையாகப் பேசினான். கடைசியில் தன் தங்கையை அவனுக்கு மணம் செய்து வைக்க விரும்புவதாகக் கூறினான்.

திம்மப்பன் இதையும் எதிர்பார்த்திருந்தான். ஆகவே, தடை சொல்லாமல் ஒத்துக் கொண்டான்.

ஒன்றிரண்டு பணம் செலவு செய்து திருமணம் பரபரப்புடன் நடந்தேறியது.

செல்வி மணப்பெண் போலவே நடந்து கொண்டாள். திம்மப்பனுடன் அவள், கணவன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

திம்மப்பன்

ஒரு செல்வன் என்றே செல்வி எண்ணியிருந்தாள். ஆனால், அவன் வீடு இடிந்து விழுந்த குட்டிச் சுவரின் ஒரு மூலையிலுள்ள குச்சு வீடாயிருந்தது. அது கண்டு அவள் ஏமாற்றம் அடைந்தாள்.

66

'அன்பரே! இவ்வளவு பணம் வைத்திருக்கீறீர்களே, உங்கள் டு ஏன் குச்சு வீடாயிருக்கிறது?” என்றாள்.

அவன் கலகலவென்று சிரித்தான்.

அவள் முன் அவன் தன் பையை அவிழ்த்தான். ஓடுகள் கலகல வென்று உருண்டோடின. “உன் அண்ணன்மார் கண்ணைக் கவர்ந்த பணம் இதுதான். இதைத்தானே அவர்களிடம் கொண்டு சேர்ப்பதாக நீ கூறியிருந்தாய்?" என்றான்.

அவள் சிறிது நேரம் வெட்கித் தலை குனிந்தாள். திருடர்களை அவன் ஏய்த்த திறமை கண்டு அவள் வியப்படைந்தாள். ஆனால், அவர்களுடன் தான் செய்த திட்டம் வெளிப்பட்டது கண்டு நாணம் அடைந்தாள்.