உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

அப்பாத்துரையம் - 33

இளம் பெண், அவள் அவர்கள் மனங்கோணாமல் அவர்களுக்கு வேலை செய்தும் தண்ணீர் மொண்டும் உதவினாள்.

செல்வி கிணற்றில் தண்ணீர் இறைக்கச் சென்றாள். அச்சமயம் திம்மப்பன் தன் பையுடன் அதன் அருகே வந்து உட்கார்ந்தான். செல்வி அவனுடன் இனிமையாகப் பேசினாள். ஆனால், அவள் வேலை திருடர்களின் தொழிலுக்கு உடந்தையாயிருப்பது. அவள் அதை மறக்கவில்லை.

திம்மப்பன், “எனக்குக் களைப்பாய் இருக்கிறது.சிறிது உணவும் ஒரு நாள் தங்க இடமும் கொடுப்பீர்களா?” என்று

கேட்டான்.

அவள் மகிழ்வுடன் அவனைத் திருடர்களிடம் இட்டுச் சென்றாள்.

பணப்பையைக் கண்டதே, திருடர் மகிழ்ச்சியடைந்தனர். அவன் கவனக் குறைவாய் இருக்கும் நேரம் பார்த்து, அதைத் திருட அவர்கள் சமயம் பார்த்திருந்தார்கள்.

திம்மப்பன் அவர்களுக்குச் சிறிதும் பிடி கொடுக்கவில்லை. அவன் கண் எப்போதும் அதன் மீதே இருந்தது. இரவிலும் அவன் அதைக் கெட்டியாக அணைத்துக் கொண்டே உறங்கினான்.

திருடர்களும் செல்வியும் கூடிக்கூடிப் பேசினர். அவனைக் கொன்று விடலாமா என்றுகூட அவர்கள் எண்ணினர்.

செல்விக்கு அவனைச் சாகவிட விருப்பம் இல்லை. எனவே, அவள் மிக எளிய திட்டம் ஒன்று கூறினாள். அவர்களும் அதை ஆர்வத்துடன் ஏற்றனர்.

அவள், தான் திம்மப்பனுடன் நேசமாக இருப்பதாகப் பாவனை செய்தாள். அவனைப் பின்னும் ஒன்றிரண்டு நாள் தங்கி ருக்கும்படி வேண்டினாள். அவர்கள் சூதை அறிந்து திம்மப்பனும் இணங்கினான்.

ஒன்றிரண்டு நாட்கள் சென்றன. அப்போதும் திம்மப்பன் பையை அவர்களால் திருட முடியவில்லை. அவன் எப்போதும் அதன் மீது கண்ணாய் இருந்தான்.

திருடர்கள் பின்னும் கூடிப் பேசினர். இத்தடவை செல்வி இன்னும் எளிதான திட்டம் வகுத்துரைத்தாள்.