உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

67

திம்மப்பன், “என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா! உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஏதாவது வாணிகம் செய்து வழி செய்து கொள்கிறேன். இனி வீணாகத் திரிய மாட்டேன்" என்றான்.

கிழவி அவன் நல்லுணர்ச்சியை ன்னும் பெருக்க நினைத்தாள்.

66

"அப்பா! நீ வேறு எது செய்தாலும் வாணிகம் செய்ய வேண்டாம். அன்றன்று உழைத்து, அந்தக் கூலியைக் கொண்டு பிழைத்தால் போதும். பணம் சேர்க்க வேண்டாம். ஏனென்றால், உன் தந்தை வாணிகத்தால் பெரும் பொருள் சேர்த்தார். அதனால் அவர் தன் உயிரையும் இழந்தார். உன் அண்ணன் மார்களும் அதனால் மாள நேர்ந்தது. இந்த ஊரருகிலுள்ள திருடர்கள் அவர்களைக் கொன்று செல்வத்தையும் கொள்ளை யிட்டுப் போய் விட்டார்கள். நம் குடும்பத்தில் நானும் நீயும் நம் வறுமையும் தான் மீதி” என்றாள்.

கிழவி ஒன்றிரண்டு நாட்களுக்குள் உயிர் நீத்தாள். திம்மப்பன் தன்னிடமுள்ள சிறிதளவு பொருளால் தாயின் கடைசிக் கடன் ஆற்றினான்.

தாயின் கடைசிச் சொற்கள் அவன் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தன.

தன் குடும்பத்தை அழித்த திருடர் கூட்டத்துக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டுமென்று அவன் நினைத்தான்.

அவன் பல நாட்களாகச் சிந்தனை செய்தான். இறுதியில் ஒரு வழி தோன்றிற்று.

அவன் நிறைய ஓடுகளைப் பொறுக்கிச் சேர்த்தான். அவற்றைத் தேய்த்துத் தேய்த்து, நாணயங்கள் போன்ற மெல்லிய வட்டுக்கள் ஆக்கினான். ஒரு பெரிய பையில் அவற்றை இட்டுத் தோளில் தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.

திருடர் கூட்டம் ஒரு மலையடிவாரத்தில் இருந்தது. அதில் ஏழு திருடரும் அவர்கள் மனைவிமாரும் அவர்கள் கையில் சிக்கிய ஒரு பெண்ணும் இருந்தனர். பெண்ணின் பெயர் செல்வி, அவள்