உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. திம்மப்பன் திட்டங்கள்

திண்டுக்கல் என்ற ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அவள் ஒரு செல்வமிக்க வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஊரையடுத்த மலையில் ஒரு கள்வர் கூட்டம் இருந்தது. அது அவள் வீட்டைச் சூறையாடி அவள் செல்வத்தைக் கொள்ளை கொண்டது. கள்வர்களை எதிர்த்துப் போராடி, அவள் கணவனும் இரண்டு பிள்ளைகளும் மாண்டார்கள். அவள் தன் கடைசிப் பிள்ளை யான திம்மப்பனுடன் தன் இடிந்த வீட்டின் ஒரு மூலையில் வாழ்ந்து வந்தாள். கடுமையாக வேலை செய்தும் அவளுக்குச் சிறிது கூலியே கிடைத்தது. அதைக் கொண்டு அவளும் திம்மப்பனும் வாழ்வதே மிகவும் கடுமையாக இருந்தது.

திம்மப்பன் தன் தாயின் வறுமையைச் சிறிதும் எண்ணிப் பார்க்க வில்லை. குறும்புக்காரருடன் சேர்ந்து கும்மாளமடித்து வந்தான். தாய்க்கும் மிகவும் தொல்லை கொடுத்தான்.

ஒரு நாள் கிழவிக்கு உடல் நலிவுற்றது. அவள் வேலை செய்ய முடியாமல், படுக்கையில் கிடந்தாள். கூலியும் கிடைக்கவில்லை. உணவுக்கும் வழியில்லை.

தான் இறந்தபின் திம்மப்பன் நிலை என்ன ஆகுமோ என்று அவள் கவலைப்பட்டாள்.

தன் வாழ்வில் முதல் தடவையாகத் திம்மப்பனுக்கு வருத்தம் ஏற்பட்டது.

தாய் அது கண்டு பின்னும் மனம் உருகினாள். டு

"அப்பா! நான் இன்னும் எத்தனை நாள், எத்தனை மணி இருக்கப் போகிறேனோ, தெரியவில்லை. நீயோ குடும்பக் கவலை யுமில்லாமல், பிழைக்க வழியும் தெரியாமல் திரிகிறாய். நான் இறந்தபின் உனக்கு என்ன ஆகுமோ என்றுதான் கவலைப் படுகிறேன்” என்றாள்.