உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. கொடைமீளியின் துயர்

நீலமலைக்கு அப்பால் செங்கேணி என்று ஒரு நாடு உண்டு, அதில் கொடைமீளி என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் தன் பயருக்கு ஏற்ப ஒரு பெரிய கொடை வள்ளல். யார் எது கேட்டாலும் அவன் இல்லை என்று சொல்வதில்லை. அவன் நாட்டுக்குச் சென்று தங்கள் வறுமையைப் போக்கிக் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள்.

கொடைமீளியின்

மனைவி சேதாம்பற்செல்வி கணவனைப் போலவே இரக்கமனம் உடையவள். அவன் கொடை வண்மைக்கு ஏற்ப, அவளும் விருந்தோம்பும் வண்மை உடையவளாயிருந்தாள்.

அங்கன், அனங்கன் என்று அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்தான் இருந்தன.

கொடைமீளி சிறந்த போர்வீரனாகவும் இருந்தான். ஆகவே, எந்த பகையரசனும் அவன் நாட்டின் மீது படையெடுக்க அஞ்சினான். அவன் ஆட்சி நல்லாட்சியாய் இருந்ததால், குடிமக்களும் அவனைப் போற்றினர்.

கொடைமீளியின் பகையரசனான கடுங்கோன் அவன் நாட்டை வஞ்சனையால் பெற எண்ணினான். அவன் ஒரு அறவோன் உருவம் மேற்கொண்டு கொடைமீளியிடம் வந்தான்.

கொடைமீளி அவனை இன்சொல்லுடன் வரவேற்றான். “தாம் வந்த செய்தி என்ன? என்னால் தங்களுக்கு என்ன ஆக வேண்டும்?" என்று கேட்டான்.

66

'அரசே! தங்களிடம் ஒரு வேண்டுகோளுடன்தான் வந்திருக்கிறேன். தாங்கள் எது கேட்டாலும் மறுக்காது கொடுப்பவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆயினும், நான்