உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

81

விரும்புவதைக் கேட்கத் தயங்காமல் இருக்க முடியவில்லை” என்றான். அறவோன் உருவில் வந்த அந்த வஞ்சக மன்னன்.

"எதுவாயினும் கேளுங்கள், தருகிறேன், சிறிதும் தயக்கம் வேண்டாம்" என்றான் கொடைமீளி.

கடுங்கோன் தன் அறவுருவைக் கலைத்துத் தன்னுருவிலேயே நின்றான். "நான் விரும்புவது உம் நாடு, உம் அரசு, உம் செல்வம் அத்தனையும் தான். அறவோன் உருவில் வந்தால்தான் கொடுப்பீர்கள் என்று நினைத்து வந்தேன். ஆனால், என் உருவிலேயே அதைப் பெற விரும்புகிறேன். இனி உங்கள் விருப்பம்” என்றாள்.

"எந்த உருவில் வந்தால் என்ன? நீர் விரும்பியதை எடுத்துக் காள்ளும்" என்று சொல்லிக் கொண்டே கொடைமீளி தன் அரசுத் தவிசிலிருந்து இறங்கினான்.

வஞ்சனையால் கேட்டவனிடம் வாய்மொழிப்படி நடக்க வேண்டியதில்லை என்று அமைச்சர் தடுக்க முனைந்தனர். அரசன் கேட்கவில்லை. அன்றே அவன் கடுங்கோனை அரசனாக முடிசூட்டினான். அவனையே அரசனாக ஏற்கும்படி நாட்டு மக்களுக்கு ஆணை பிறப்பித்தான். பின் தன் ஆட்சியையும், செல்வத்தையும் அவனிடம் விட்டு விட்டு மனைவி மக்களுடன் இரவோடிரவாக நாட்டை விட்டு அப்பால் சென்றான்.

குடிகள் அழுதனர்; கோமக்கள் மயங்கினர்; அமைச்சர், படைவீரர் நெஞ்சம் புழுங்கினர். ஆனால், அவர்கள் நெஞ்சம் திறைகொண்ட வேந்தனின் ஆணைக்கு அவர்கள் கட்டுப் பட்டனர். வேண்டா வெறுப்பாகப் பகை வேந்தன் ஆட்சிக்கு

உட்பட்டனர்.

கொடைமீளி நாடு கடந்து காட்டை அடைந்தான்.காட்டு வழியிலேயே நெடுநாள் நடக்க வேண்டியதாயிற்று. பஞ்சணையும் பட்டுமல்லாமல் ஏதுமறியாத அரசி சேதம்பற் செல்வியும், பாலும் பழமும் பாகுமல்லாமல் எதுவும் அறியாத அரசிளஞ் செல்வரும் வெய்யிலில் வெம்பியும், முள்வழியில் நைந்தும் வருந்தினர். காய்கனிகளும் தண்ணீரும்கூட அவர்களுக்கு அவ்வப்போது தான் கிடைத்தது.