உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

||–

அப்பாத்துரையம் - 33

காடும் மலையும் கடந்தபின், அவர்கள் மேலைக் கடற் கரையடுத்த கொண்கான நாட்டை அடைந்தனர். காட்டில் கிடைத்த உணவுகூட இங்கே அவர்களுக்கு அரிதாயிற்று. ஆடையணிமணிகளை விற்றுச் சில நாள் பின்னும் நடந்தனர். கடற்கரையடுத்த பாக்கம் ஒன்றில் அவர்கள் ஓரிரவு தங்கவேண்டி வந்தது. அங்குள்ள ஒரு விடுதியைத் தேடிச் சென்றனர்.

டம்

விடுதியின் தலைவி ஒரு கிழவி, அவள் முதலில் இடம் தர மறுத்தாள். சேதாம்பற்செல்வியின் தோற்றத்தைக் கண்டதும் ணங்கினாள். விடுதியில் அவர்களுக்கு விடப்பட்ட பின்புறமுள்ள கூடமே. அதில் மூட்டை, கொசு, எலி, பெருச்சாளி அகிய எல்லாவற்றின் தொல்லைகளும் நிறைந்திருந்தன. அரசியும் செல்வர்களும் இவற்றிடையேகூட அலுப்பால் அயர்ந்து உறங்கினர். ஆனால் அரசனுக்கு உறக்கம் வரவேயில்லை. 'விடுதிக்காரி மறுநாள் தங்கியதற்கான கூலி கேட்டால் என்ன செய்வது?” என்ற கவலை அவனை அரித்தது. அவன் கையில் ஒரு காசுகூட இல்லை.

காலையில் விடுதிக்காரி பணம் கேட்க வந்தாள். அரசன் அவள் வாய்திறக்குமுன் தன் நிலைமையை விளக்கினான். "அம்மா! நாங்கள் நல்ல நிலையில் இருந்தவர்கள். ஆனால், இப்போது கையில் ஒரு காசுகூட இல்லை. ஆயினும் எங்களுக்கு

66

டமளித்த உங்கள் கடன் தீர்க்காமல் நாங்கள் போக விரும்பவில்லை. நான் வேலை செய்து கடன் தீர்த்துப் போகிறேன்" என்றான்.

விடுதிக்காரி பணப் பேராவல் உடையவள். அவள் முதலில் கடுஞ்சீற்றம் அடைந்தாள். பின் உண்மையிலேயே அவனிடம் காசில்லை என்று அறிந்து, ஒருவாறு அவன் வேண்டுகோளுக்கு இணங்கினாள். ஆனால், எல்லோருமே வேலை செய்ய வேண்டுமென்றும், ஒருநாள் தங்கலுக்கு ஒருநாள் வேலை ஊதியம் சரியாகப் போய்விடுமென்றும் வற்புறுத்தினாள்.

அரசன் இணங்கினான்.

அரசன் தன் தவறை உணர நீண்டநாள் ஆகவில்லை. ஒவ்வொரு நாள் உழைப்பும் முந்தியநாள் தங்கலுக்கே சரியாயிற்று. உழைத்த நாள் தங்கலுக்காக ஒவ்வொரு நாளும்