உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

85

கரையேறியதும் அவன் பிள்ளைகளைத் தேட விரைந்தான். ஆனால், ஒரு பெருங்கூட்டம் அவன் எதிரே வந்தது. அவர்கள் பொன் வெள்ளியாடைகளால் ஒப்பனை செய்யப்பட்ட ஒரு பாடையுடன் வந்தனர். பாடையின் முன் சென்றவர்கள் கொடைமீளியைப் பற்றிக் கொண்டு சென்றனர்.

அந்தக் கூட்டம் இறந்துவிட்ட அந்நாட்டு அரசனை அடக்கம் செய்யப் புறப்பட்ட கூட்டமே. பாடையின் எதிரே வருபவர் யாராயிருந்தாலும் அவரையே அரசராகக் கொள்வது அந்நாட்டு வழக்கம். அதன்படி கொடைமீளி மீண்டும் ஒரு புதிய நாட்டில் அரசனானான். ஆயினும், அரசியையும் அரசிளஞ் செல்வரையும் இழந்ததனால், அவன் ஆட்சியில் மனங்கொள்ள வில்லை. அமைச்சரிடமே எல்லா பொறுப்பையும் விட்டுவிட்டு, மனைவி மக்களைத் தேடும் பணியில் கருத்துச் செலுத்தினான்.

பலநாள் தேடியும் பயனில்லாமல் போகவே, அவன் கிளர்ச்சியற்றவனாய், தன் அறையிலேயே கிடந்து வாடி வதங்கினான்.

படகோட்டியிடம் வளர்ந்த பிள்ளைகள் இளைஞராயினர். வளர்த்த தாய் தந்தையரிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்கள் வேலை நாடிப்புறப்பட்டனர். தற்செயலாக அவர்களுக்கும் கொடைமீளியின் அரண்மனையிலேயே வேலை கிடைத்தது.

சேதாம்பற்செல்வி இருந்த கப்பல் ஒருநாள் தற்செயலாகக் காடைமீளி ஆண்ட தலைநகரின் துறைமுகத்தில் வந்து சேர்ந்தது. கப்பலைப் பாதுகாக்க அமைச்சர் இரண்டு காவலரை அனுப்பினார். ஆனால், அந்தக் காவலர் வேறுயாருமல்ல; அங்கன், அனங்கன் என்ற அரசிளஞ் செல்வர்களே.

அவர்கள் சேதாம்பற்செல்வியின் அறையருகிலேயே காவலிருந்தனர். அவர்கள் குரல்கேட்டுச் சேதாம்பற்செல்வி திடுக்கிட்டாள்.

அவர்கள் இயல்பாகத் தம் இளங்கால நினைவுகளைப் பற்றி பேசினர். அனங்கன் சிறுபிள்ளையாதலால் அவனுக்கு எதுவும் நினைவில்லை. அங்கன் அவற்றை நினைவுடன் எடுத்துக் கூறினான். ஆற்றில் தந்தையை இழந்துவிட்டது பற்றிய நிகழ்ச்சி உருக்கமாயிருந்தது. ஆனால், சேதாம்பற் செல்வி இன்னும்