உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

||–

அப்பாத்துரையம் - 33

அவர்கள் யார் என்று காண முடியவில்லை. இன்ன தென்றறியாத மனித உணர்ச்சிதான் அவள் உள்ளத்தில் அலையாடிற்று. ஆனால், விடுதியைப் பற்றியும் தாயைப் பற்றியும் பேச்சு வந்ததும் அவள் துடிதுடித்தாள். அவர்கள் பெயரைக் கேட்டறிந்ததும் அவர்கள் தம் பிள்ளைகளே என்றறிந்தாள்.

தான்

தன்

சேதாம்பற்செல்வி அந்நிலையிலும் தன் சூழலை மறக்கவில்லை. ஆகவே, உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டாள். கப்பலைவிட்டு வெளியேறினாலல்லாமல் பிள்ளைகளுடன் சேர முடியாது என்று அவள் கண்டாள். இதற்காக, சூழ்ச்சியறியாத அவள் உள்ளம் சூழ்ந்து சூழ்ச்சி செய்தது.

காவலராயிருந்த இளைஞர்கள் தன்னைப் பற்றி ஏளனம் செய்ததாகவும், அவர்களைப்பற்றி அரசனிடம் முறையிடும்படியும் அவள் வணிகனை வேண்டினான்.

அரசன், வணிகனையும் சேதாம்பற் செல்வியையும் ளைஞரையும் அழைத்து உசாவும்படி அமைச்சருக்கு ஆணையிட்டான். ஆனால், இளைஞர்மீது அவன் நல்லெண்ணங் கொண்டிருந்ததால், வழக்கத்தை மீறித் தானே முறைமன்றத்துக்கு வந்திருந்தான்.

முறை செய்த அமைச்சர், சேதாம்பற்செல்வியை வணிகன் மனைவி என்று கருதியிருந்தார். ஆகவே, "நீ இந்த வணிகன் மனைவி தானே?” என்று கேள்வியுடன் உசாவல் தொடங்கினார்.

66

‘அல்ல” என்று கூறி அவள் தன் கதையைத் தெரிவித்தாள்.

எதிர்பாத்தபடி இங்ஙனம் தன் அடாச் செயல் வெளிவருவது கண்டு வணிகன் நழுவினான். காவலர் அவனைக் கைப்பற்றிக் கொண்டனர்.

வணிகனிடமிருந்து விடுதலை பெற்றபோதே! சேதாம்பற் செல்வி இன்னும் துணிவு பெற்றாள். அவள் முறை நடுவரிடம் புதிய வேண்டுகோள் விடுத்தாள். “அண்ணலே! நான் வணிகனிட மிருந்து விடுதலை பெறுவதற்கே, இந்த இளைஞர்மீது குற்றம் சாட்டினேன். அவர்கள் உண்மையில் என் பிள்ளைகளே, என் கதை கேட்டு, அவர்களுடன் என்னைச் சேர்க்கும்படி வேண்டுகிறேன்” என்றாள்.