உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 33

சிந்தித்தான். சிந்தித்துச் சிந்தித்து அவன் தலைசுழன்றது. அந்நிலை யிலும் பறவையின் நினைவுகூட அவனுக்கு வரவில்லை.

ஆனால், பறவை

பறந்தோடிற்று.

இப்போதும் அவனைவிட்டுப்

ஏற்றித் தானும் ஏறி அமர்ந்தான்.

மான் பாய்ந்தோடிற்று; பறவை பறந்தோடிற்று.

வழியில் வாய்க்கால் கரை வந்த போது, தவளை கத்திற்று. பறவை அதைத் தூக்கிக் கொண்டு மானுடன் பறந்தது.

காடு கடந்து ஒரு புதிய நாட்டுக்கு அவர்கள் வந்தார்கள்.

குளக்கரைகளிலெல்லாம்

அங்கே, தவளைகள் நிறைந்திருந்தன. மரங்களிலெல்லாம் பறவைகள் நிறைந்திருந்தன. சூழ இருந்த காடுகளிலெல்லாம் மான்கள் நிறைந்திருந்தன.

தவளை ங்கே வந்தவுடன் உண்மையிலேயே ஒரு தம்பியாயிற்று.பறவை இங்கே வந்தவுடன் உண்மையிலேயே ஒரு தங்கையாயிற்று. மான் இங்கே வந்தவுடன் உண்மையிலேயே ஒரு அத்தை மகளாயிற்று.

தம்பி, தங்கை, மைத்துனர் ஆகிய உறவினர் உதவியோடு நம்பி நாகுவுடன் இன்பமாக வாழ்ந்தான்.