உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12. உயிர் மருந்து

செம்பியனும் சேந்தனும் அண்ணன் தம்பியர். செம்பியன் சேந்தனிடம் தன் உயிரையே வைத்திருந்தான்.

சேந்தன் ஒரு நாள் கண்ணை மூடினான். மூடின கண் திறக்க வில்லை.மீளாத் துயிலில் ஆழ்ந்தான்.

செம்பியன் ஆறாகக் கண்ணீர் விட்டான். தன் பணத்தை எல்லாம் செலவழித்துச் சந்தனத்தால் பெட்டி செய்தான். அதில் சேந்தன் உடலை வைத்து அடக்கம் செய்தான்.

சேந்தனில்லாததால், அவனுக்கு வாழ்க்கை வெறுத்தது. அவன் காடுமேடாக அலைந்தான்.

காட்டுவழியில் ஒரு மண்டபம் இருந்தது. அதில் இருந்து கொண்டு அவன் சேந்தனை நினைந்து நினைந்து உருகினான்.

அவன் முன் ஓர் ஆண்டி வந்து நின்றான். “அப்பனே, நீ ஏன் காட்டு மண்டபத்திலிருந்து அழுகிறாய்?" என்று கேட்டான்.

"மாண்டுபோன தம்பியில்லாமல் என்னால் வாழ முடிய வில்லை. அவனை நினைத்து நினைத்து வருந்துகிறேன்” என்றான்

செம்பியன்.

ஆண்டியின் முகத்தில் ஒரு புன்னகை ஒளி வீசிற்று. துயரத்தில் ஆழ்ந்திருந்த செம்பியன் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், ஆண்டி சொன்னது அவனுக்குக் கேட்டது.“அப்பா,நீ தம்பியிடம் கொண்ட பாசம் பெரிது, ஆகவே, திரும்ப அவனை உயிரோடு காண ஒரு வழி சொல்கிறேன்” என்றான் அவன்.

செம்பியன் ஆவலுடன், “ஆ, அப்படியா? கூறுங்கள், கூறுங்கள்!” என்றான்.

66

'ஆம், இதோ மூன்று மாங்கனிகள் தருகிறேன். இவை மிகவும் இனிமையானவை. நண்பகலுக்குள் இவற்றை நீ செந்தில்