உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13. தங்க மயில்

முல்லைக்காட்டில் முத்தன் என்றொரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பதினாறாவது வயது வந்ததும் அவன் தன் தந்தையிடம் சென்றான்.

66

'அப்பா, நான் இப்போது பெரிய மனிதனாகி விட்டேன்; இனி,நானே உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். எனக்கு ஒரு கலப்பையும் கோடாரியும் கொடுங்கள்" என்று அவன் கேட்டான்.

தந்தை அவ்வாறே கொடுத்தது. "போய்வா, குழந்தாய்! கவனமாக அறிவுடன் வாழ்" என்றார்.

முத்தன் ஊரைவிட்டு நெடுந்தொலை சென்றான். அவன் ஒரு புதர்க்காட்டைக் கண்டான்; ஓர் இடத்தில் புதரை வெட்டி டைவெளி உண்டாக்கினான்.புதரைக் குவித்துத் தீ மூட்டினான். புதரின் சாம்பலுடன் நிலத்தை உழுது புழுதியாக்கினான். பின்பு அவன் நிலத்தில் தினை விதைத்தான்.

தினை கதிர்விட்டது. அவன் நாள்தோறும் இரவில் விழித்திருந்து அதைக் காத்தான். ஆனால், ஒரு நாள் அவன் சற்றுத் தூங்கிவிட்டான். எழுந்து பார்க்கும்போது, தினைப் பயிர் முழுவதும் கதிர் இழந்து நின்றது. யார் அல்லது எந்த விலங்கு அல்லது எந்தப் பறவை அவற்றை வந்து மேய்ந்தது என்று தெரியாமல் அவன் விழித்தான்.

ஆனால், தினைப்புனத்தின் ஓரத்தில் பொன்மயமான ஒரு மயிலிறகு கிடந்தது. இதன் மூலம், 'மேய்ந்தது ஒரு மயில்; ஆனால், அது மண்ணுலக மயிலல்ல, மயனுலக மயில்' என்று அவன் கண்டான்.

பொன் இறகை அவன் அருகிலிருந்த நகரத்துக்குக் கொண்டு போய் விற்க முயன்றான்.