உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

103

இறகு சொக்கத் தங்கமாயிருந்தது. அரசனைத் தவிர யாரும் சொக்கத் தங்கத்தால் எதுவும் செய்யக் கூடாது. ஆகவே, பொன் வணிகன் அவனைக் காவலரிடம் சேர்ப்பித்தான். காவலர் அவனை மன்னன் முன் கொண்டு நிறுத்தினர்.

66

'இந்த இறகு உனக்கு ஏது?” என்று அரசன் கேட்டான்.

முத்தன் அது தனக்குக் கிடைத்த வரலாறு கூறினான். அரசனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

"இந்த இறகுக்கு உரிய தங்கமயிலைக் கொண்டு வந்து காட்டு. இன்னும் ஏழு நாட்களில் நீ கொண்டு வந்து காட்டாவிட்டால், உன்னை மண்ணில் புதைத்து மண்டை மீது விளக்கேற்றி வைப்பேன்” என்றான்.

முத்தனுக்கு முதலில் இன்னது செய்வது என்று

தெரியவில்லை. அவன் சிந்தித்தான்.

பின் அவன் தினைப்புனமெங்கும் கூர்ந்து கவனித்தான். மயிலின் சுவடுகள் நிலத்தில் இருந்தன. அவற்றை அவன் பின்பற்றிச் சென்றான்.

அந்த

திடுமெனச் சுவடு நின்றுவிட்டது. 'மயில் டத்திலிருந்து பறந்து சென்றிருக்க வேண்டும். இனி, அது சென்ற வழியை எப்படிக் கண்டுபிடிப்பது?' என்று அவன் வருந்தினான்.

அவன் கன்னத்தில்

கையூன்றிக் கவலையுடன் குந்தியிருந்தான். அவன் கண்ணீர் கன்னத்தின் வழியாக வடிந்து புல்தரை மீது விழுந்தது.

புல்மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமை அவனைப் பார்த்தது. “தம்பி! ஏன் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு என்ன துன்பம்?" என்று கேட்டது.

66

'எருமை அண்ணா! தினைப்புனங்களில் மேயும் தங்க மயில் ஒன்று இருக்கிறது. அதைக் கொண்டு வந்து காட்ட வேண்டு மென்று அரசன் ஆணையிட்டிருக்கிறான். காட்டாவிட்டால், என்னை மண்ணில் புதைத்து, என் மண்டை மீது விளக்கேற்றி வைப்பானாம்" என்றான் அவன்.

“என் முதுகில் ஏறிக் கொள். அதன் சுவடு காணும் வரை கொண்டு செல்கிறேன்” என்றது காட் -ருமை.