உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 215


“கடவுள் தான் இனி உன் தாய், தந்தை, உறவினர் எல்லாம்.

“காலம் வரும், எப்படியாவது அதுவரை எவருக்கும் தெரியாமல், எங்கும் போகாமல், எவரையும் நம்பாமல் இங்கே வாழுங்கள்.”

திரும்பத் திரும்ப நினைத்து அவர்கள் முகங்களை நான் என் நெஞ்சில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சொற்களைக் சொல்லிச்சொல்லிப் பாடம் செய்து கொண்டிருக்கிறேன்.

அறியாச் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்து எப்படியோ நான் சமைக்கவும் ஆடை புனையவும் வீடு காக்கவும் கற்றுக் கொண்டு, இந்த என் தங்கையையும் வளர்த்து வந்திருக்கிறேன்.

“இந்த அறையை ஒட்டிய அடுத்த அறையே எங்கள் வீடு, எங்கள் ஊர், எங்கள் உலகம், அதிலிருந்து பார்த்தால் எல்லா அறைகளும் தெரியும். ஆனால், அதிலிருந்து இந்த அறைக்கு மட்டும் எவரும் அறியாது வரும் வழி உண்டு. அதன் மூலமாகவே நாங்கள் தோன்றித் தோன்றி மறைகிறோம்.

ஆவிகள் அறிந்த வரைக்கும் குழந்தை ஆவிகளின் கதையைக் கேட்டுத் தென்னவன் தன் வாழ்வின் முதல் தடவையாகக் கடவுளுக்கு மனமார வணக்கம் செலுத்தினான். ‘இந்தக் குழந்தை ஆவி ஊடாடும் வீட்டுக்கு வந்ததனால், நான் எத்தனை புண்ணியம் செய்தவனாவேன்’ என்று மகிழ்ந்தான்.

குழந்தை ஆவிகளின் கதையின் மற்றக் கூறுகளை அறியத் தென்னவனுக்கு நெடுநாள் பிடிக்கவில்லை. நண்பகலில் ஒருநாள் தென்னவன் வெண்ணிலாவே போன்ற ஒரு நங்கை தெருவில் போவது கண்டான்.

அவனை அறியாமல் அவன் அகம் துடித்தது. “வெண்ணிலா” என்று கூவினான்.

அவள் சட்டென நின்றாள். அவள் கையிலிருந்த நீர்க்குடம் கீழே விழுந்து உடைந்தது. அருகே ஊர் கூடிவிட்டது. ஆனால், நங்கை தன்னை விரைவில் சமாளித்துக் கொண்டாள்.

‘எனக்கு வழக்கமான மயக்க நோய் திடுமென வந்து விட்டது. வேறொன்றுமில்லை’ என்று கூறி, மற்றவர்களையெல்லாம்