உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
216 ||

அப்பாத்துரையம் - 33



அவள் அனுப்பி விட்டாள். தென்னவனை நோக்கி அதன்பின் அவள் தழுதழுத்த குரலில் பேசினாள்.

“அன்பரே! நீங்கள் கூறிய பெயர் கேட்டுத்தான் நான் அதிர்ச்சியடைந்தேன்.

“வெண்ணிலா என்ற பெண்ணை நீங்கள் அறிவீர்களா? இன்னும் உயிருடன் இருக்கிறாளா?” என்றாள்.

தென்னவன் பக்குவமாக வெண்ணிலா, முத்தொளி ஆகிய இரு பெண்கள் தன் தங்கையர்களாக வாழ்வதை எடுத்துரைத்தான். ஆனால், குழந்தை ஆவி வீடு பற்றிக் கூறவில்லை.

அவள் மூலம், அவர்கள் வாழ்வின் பெரும் பகுதியும் அவனுக்கு விளக்கமாயிற்று.

“அன்பரே! இனி நீங்கள் எனக்கும் அண்ணா தான். அண்ணா என்று அழைக்க விரும்புகிறேன்.” அண்ணா!

“என்னைப் பார்த்து நீங்கள் வெண்ணிலா என்று அழைத்தீர்கள். அதில் இப்போது எனக்கு வியப்பில்லை. நானும் அவளும் இரட்டைப் பிள்ளைகள். என்னுடன் இப்போது ஒரு தங்கை இருக்கிறாள்; அவள் பெயர் தென்றல்; அவளை நீங்கள் பார்த்தால் முத்தொளி என்று கூப்பிடுவீர்கள். அவளும் முத்தொளியும் இரட்டைப் பிள்ளைகள்.

“நாங்கள் நால்வரும் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள், எங்கள் தாய் தந்தையர் இந்த ஊரில் பெருஞ் செல்வத்துடன் இருந்தார்கள். ஆனால், என் தந்தையின் தமையனான பெரியப்பா ஒருவர் எங்கள் தந்தையையும் தாயையும் எங்களையும் ஒழித்து விட்டு எங்கள் செல்வம் கவர எண்ணினார். நாங்கள் ஈழம் செல்லும்போது கப்பலிலேயே எங்களைக் கொல்லும்படி கொலைகாரரை உடன் அனுப்பியிருந்தார். ஆனால், தற்செயலாக எங்கள் பெற்றோர் வெண்ணிலாவையும் முத்தொளியையும் வீட்டில் விட்டு என்னையும் தென்றலையும் மட்டும் இட்டுச் சென்றிருந்தனர். வழியில் புயலில் கப்பல் உடையவே, எங்களுடன் காலைகாரரும் உயிர்ப்பேரிடருக்கு ஆளானார்கள். அவர்கள் எங்கள் தாய் தந்தையரிடம் உண்மை கூறினர். அத்துடன் பிழைத்தாலும் தாய்நாடு மீளக் கூடாது என்று தாய் தந்தையருக்கு