உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. “கோமரம் குதிரை ஈனுமா?

காயங்குளம் ஒரு கடற்கரைப்பட்டினம். அங்கே அயல் நாடு களிலிருந்து கலங்களில் குதிரைகள் வந்து இறங்கும், வணிகர் அதை உள்நாட்டு நகர்களுக்குக் கொண்டு சென்று விற்பர், விற்றுப் பெரும் பொருளுடன் திரும்புவர்.

ஒரு நாள் அமீது என்ற வணிகன் குதிரையுடன் காயங் குளத்திலிருந்து புறப்பட்டான். சாத்தன்குளம் என்ற நகரத்திலுள்ள சந்தையில் அதைக் கொண்டு சென்று விற்க விரும்பினான்.

வழியில் மனிதனுக்கு வேண்டிய உணவும், குதிரைக்கு வேண்டிய கொள்ளும் புல்லும் குதிரையின் முதுகிலேயே ஒரு சாக்கில் கிடந்தது.

அவன் சில சமயம் குதிரை மீது ஏறியும், சில சமயம் அதை நடத்திக்கொண்டும் சென்றான்.

வழியில் ஓர் ஏழைச் சிறுமி; ஒரு பனை மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்தாள்; அவள் முகம் அழுதழுது வீங்கி யிருந்தது; அவன் காலில் ஏதோ கட்டுக் கட்டியிருந்தது.

அமீது சிறுமியை அன்புடன் நோக்கினான்.“அம்மா! நீ ஏன் இப்படித் தனியாகக் காட்டிலிருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

சிறுமி மீண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டு அழுதாள். "ஐயா! நான் போக்கற்றவள். தாய் தந்தையில்லை. பிச்சை யெடுத்து வயிறு வளர்க்கிறேன். என் காலில் முள் தைத்து விட்டது. நடச் முடியவில்லை.யாரிடம் என்ன கேட்க முடியும்?" என்றாள்.

க்க

வணிகன் தன்னிடமுள்ள உணவில் சிறிது கொடுத்தான்.

தன் குதிரை மீதே அவளை ஏற்றிக் கொண்டான்.