உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அப்பாத்துரையம் - 33

மாலையாகும்போது அவர்கள் அடுத்த ஊர் வந்து சேர்ந்தனர். சிறுமி அவனுக்கு நன்றி தெரிவித்து. "ஐயா! உங்கள் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்; இஃது எனக்குப் பழக்கமான ஊர்தான். நான் சென்று வருகிறேன். தங்களுக்கு எப்போதாவது நான் உதவ முடியுமானால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றாள்.

வணிகன் சிறுமியின் உள்ளங்கனிந்த நன்றியுணர்வு கண்டு வியப்படைந்தான். அந்த நன்றியுணர்வை அவளின் செயலில் காட்டும்வேளை மிக விரைவிலே வரும் என்று அவன் எண்ணவேயில்லை.

அவ்வூரின் ஒரு பகுதியில் வீடுகள் ஒழுங்காகவும் வரிசை யாகவும் கட்டப்பட்டிருந்தன. வீடுகளின் நடுவே ஒரு பெரிய சதுக்கமும், அதன் நடுவே ஒரு கோமரமும் இருந்தன. அதன் பக்கமாக அவன் போகும்போது, ஒருவன் நட்புரிமையுடன் அவனை அணுகினான்.

66

'அண்ணா! தாங்கள் நெடுந் தொலைவிலிருந்து வருகிறீர்கள் போல் இருக்கிறது. நம் வீட்டுக்கு வாருங்கள். என் விருந்தினனாக இரவு தங்கி விடிந்து செல்லலாம்" என்று தேனொழுகப்

பேசினான்.

அமீது உண்மையில் எங்கே இரவு தங்குவது என்ற கவலை யுடன்தான் சென்றான். ஆகவே அந்த வாய்ப்பை ஆர்வத்துடன் ஏற்று, அவன் வீடு சென்றான்.

66

'குதிரையை எங்கே கட்டுவது?" என்று வணிகன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

"அதோ அந்த கோமரத்தில் கட்டி வையுங்களேன்” என்றான் வீட்டுக்குரியவன்.

வணிகனும் வீட்டுக்காரனும் நெடுநேரம் பேசியிருந்தனர். பின் திண்ணையில் படுத்து உறங்கினர்.

பொழுது விடியுமுன் வீட்டுக்காரன் முதலில் எழுந்து சென்றான். வணிகன் அப்போது விழித்துக் கொண்டிருந்தாலும், அலுப்பால் எழாமல் படுத்துக் கொண்டே சிறிது புரண்டான்.