உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

5

“தலைமுறை தலைமுறையாக ஊரைக் காக்கும் கோமரமே! மாதம் தவறாமல் நீ எனக்கு ஒரு கன்றை ஈன்று தந்திருக்கிறாய். ஆனால் இந்த மாதம் நீ காட்டிய கருணையே கருணை! இப்போது நீ ஒரு குதிரையையே தந்திருக்கிறாய்?” என்று அவன் கோமரத்தை வாழ்த்தி வணங்கினான்.

பின், அவன் குதிரையை அதிலிருந்து அவிழ்த்து,அதன் மீது ஏறிப் புறப்படத் தொடங்கினான்.

இத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்தான் வணிகன். நண்பனாக அணுகியவன், நயவஞ்சகனாகச் செயலாற்றுவது கண்டு அவன் உடனே எழுந்து சென்றான்.

“அன்பனே! என்ன பிதற்றுகிறாய்? உன் நண்பன் குதிரையை ஆளற்ற குதிரையாகப் பாவித்துக் கதை அளக்கிறாயே,” என்றான்.

வீட்டுக்காரன், "ஐயா! நீ எங்கே குதிரையுடன் வந்தாய்? நடந்தல்லவா வந்தாய். இந்தக் கோமரம் மாதந்தோறும் ஒரு கன்றோ, ஆடோ ஈனுவது இவ்வூரார் எல்லோருக்கும் தெரியுமே! இத் தடவை அஃது என் பூசனையில் மகிழ்ந்து ஒரு குதிரை ஈன்றிருக்கிறது. அஃது என்னுடையதே. உன்னுடையதல்ல." என்றான்.

அவ்விடம் வந்த அந்தக் குப்பத்தின் ஆட்கள் அனைவரும், “நீ வரும்போது நாங்கள் பார்த்தோமே! நீ குதிரை மீது எங்கே வந்தாய்? நடந்தல்லவா வந்தாய்?” என்று அஞ்சாது பச்சைப் பொய் கூறினர்.

வணிகன் அப்பக்கத்துள்ள ஒரு முறை நடுவரிடம் சென்று முறையிட்டான். ஆனால், அவர் அந்தக் குப்பத்தின் பல திருட்டுக் களில் மறை ஊதியம் பெற்று வந்தவராதலால், அவர்களுக்கு உடந்தையாகவே இருந்தார்.

66

"குதிரை உனது என்பதற்குக் கண்கூட என்பதற்குக் கண்கூடான சான்று உண்டா? இல்லையானால், கண்டவர் சான்றுகளைத்தான் நான் நம்ப வேண்டும்" என்றார் அவர். மாலை நேரத்துக்குள் சான்று காட்டா விட்டால், அவனுக்கு எதிராகத் தீர்ப்பு அளித்துவிடப் போவதாக அவர் அச்சுறுத்தி அனுப்பினார்.

"முன்பின் தெரியாத அந்த ஊரில் தனக்குச் சான்று கூற யார் முன் வருவார்கள்? என்ற தடுமாற்றத்துடன் வணிகன்