உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அப்பாத்துரையம் - 33

ஊரெங்கும் சுற்றினான். தன் குதிரை மீதே ஏறி வந்த சிறுமியின் எண்ணம் அவனுக்கு ஏனோ வரவேயில்லை. ஆனால், சிறுமி அவனைத் தொலைவிலிருந்தே பார்த்து விட்டாள்.

அவள் அவனிடம் விரைந்தோடி வந்து. "ஐயா! ஏன் கவலையுடன் அலைகிறீர்கள்? உங்கள் குதிரை எங்கே?" என்றாள்.

வாணிகன் முகத்தில் களைதட்டிற்று. “ஆம், குதிரையை நேரில் கண்ட ஒரு சான்று கிடைத்துவிட்டது!” என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்தது.

சிறுமி தன் நன்றியுணர்வைக் காட்டுவதற்குக் கிடைத்த வாய்ப்பை ஆர்வத்துடன் ஏற்றாள்.

ஆனால், முறை மன்றத்துக்கு நேரே வர அவள் விரும்ப வில்லை. “கோமரத்தருகேயே நான் இருக்கிறேன். முறைமன்றக் காவலன் மூன்று தடவை கூவியபின், நானாக வருகிறேன்” என்றாள்.

அவள் உட்கருத்தை வணிகன் உணரவில்லை ஆயினும், "சரி," என்று கூறிச் சென்றான்.

நடுவர், “சான்று கிட்டிற்றா?” என்றார், கிட்டவில்லை என்ற மாற்றத்தையே எதிர்பார்த்து!

ஆனால், அவன் “உண்டு” என்றதும் அவர் முகம் சுளித்தது. "யார்"?

வணிகன் சிறுமியின் பெயர் கூறினான்.

நடுவர், “நங்கை!" என்று அழைத்தார்.

காவலாள், "நங்கா, நங்கா நங்கா!'" என்று மூன்று தடவை

கூவினான்.

மூன்று தடவை கூவும் வரை யாரும் வரவில்லை. ஆனால், மூன்றாம் தடவையில் சிறுமி விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தாள். அவள் கந்தலாடையின் சுருக்குகள் நீரில் நனைந்தும் அழுக்கடைந்தும் இருந்தன.

நடுவர் உரத்த குரலில் "நங்கை, நீ வர ஏன் வ்வளவு நேரம்?” என்று கேட்டார்.