உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

66

7

"ஐயா மன்னிக்க வேண்டும் இந்தக் குப்பத்தை அடுத்த தெப்பக்குளத்தில் தீப்பற்றிக் கொண்டது. வெப்பம் பொறுக்க மாட்டாமல் மீன்கள் கரைமீது துள்ளித்துள்ளிவிழுந்தன. அவற்றை மடியில் திரட்டிக் கொண்டிருந்தேன். அதனால் தான் நேரம் ஆயிற்று” என்றாள்.

"இஃதென்ன அண்டப்புளுகு புளுகுகிறாயே! தண்ணீரில் எங்கேயாவது நெருப்புப் பற்றுமா?” என்று கேட்டார் நடுவர்.

"கோமரம் குதிரைக்குட்டி ஈனுகின்ற குப்பத்தில், நெருப்பு ஏன் தீப்பற்றாது?” என்றாள் சிறுமி.

மன்றத்திலிருந்த எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். நடுவருக்கு வெட்கமாயிற்று.

அவர் சிறுமியின் சான்று முழுதும் கேட்காமலே, குதிரையை வணிகனிடம் ஒப்படைத்தார்.

சிறுமியின் நன்றியுணர்வை மட்டுமன்றி, அவள் அறிவையும் கண்டு வணிகன் அவளைப் பாராட்டினான். அவளைத் தன்னுடனே இட்டுச் சென்று தன்மகளாக வளர்த்தான்.

அவளும் வணிகன் குடிக்குரிய ஒப்பற்ற குலக் கொழுந்தானாள்.