உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

II.

அப்பாத்துரையம் - 33

அரசனையும் இளவரசியையும் மீட்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருபவருக்கு. நாட்டிற் பாதியையும் இளவரசியையும் கொடுப்பதாக அரசன் பறையறை வித்தான்.

பொன்மீளி இதற்காகவே காத்திருந்தான். அவன் தன் வளர்ப்புத் தந்தையாகிய மீனவனிடம் சென்றான்.

"என்னால் அரசனையும் இளவரசியையும் நலப்படுத்த முடியும்" என்றான்.

மீனவன் முதலில் இதை மறுத்தான். பொன்மீளியின் வற்புறுத்தலால் அவன் பொன்மீளியை அரசனிடம் இட் சென்றான். இளைஞனாக்கும் கனியால் பொன்மீளி அரசனையும், நிலாச்செல்வியையும் பழைய உருவம் பெறச் செய்தான்.

அரசனுக்கும் மக்களுக்கும் வந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பொன்மீளிக்கு நாட்டிற் பாதியையும் நிலாச் செல்வியையும் தர எல்லோரும் இசைந்தனர்.

ஆனால், இப்போது நிலாச்செல்விக்கு மட்டும் துளி கூட மகிழச்சியில்லை. அவளுக்குச் சமையற்கார இளைஞனே பொன்மீளி என்பது தெரியாது.

தனிமையில் சென்றதும், நிலாச் செல்வியிடம் தான் யார் என்பதை அவன் கூறினான். வயது பெருக்கும் கனியை வேண்டிய அளவில் அருந்திப் பழைய உருவம் காட்டினான். அவளும் தன் துயரம் மாற்றிப் புது மகிழ்ச்சி கொண்டாள்.

நிலாச் செல்வியை மணந்து பொன்மீளி சில நாள் அந்நாட்டின் இளவரசனாக இருந்தான். பின் ஒரு நாள் அவன் அரசனிடம் தன் வரலாறு கூறினான். தன் நாட்டுக்குச் செல்ல விடை தரும்படி கோரினான். அரசன் முதலில் மகளை விட்டுப் பிரிய மனம் ஒப்பவில்லை. ஆயினும், இறுதியில் அவளை அனுப்ப இசைந்தான். ஏராளமான பொன்மணி கலங்களுடன் அவர்கள் புறப்பட்டனர்.

மரக்குதிரையைப் பொன்மீளி திரும்பவும் பொருத்தி, அதன் மேல் ஏறி நிலாச் செல்வியுடன் தன் நாடு வந்தான்.