உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

43

ஒப்பவில்லை. ஆகவே, பொன்மீளி ஒரு திடலில் இறங்கி அவளை மட்டும் திரும்ப அவள் மாளிகைக்கு அனுப்பினான்.

வைர மாலையை எடுத்துக் கொண்டு நிலாச்செல்வி மீண்டும் புறப்பட்டாள். ஆனால், கெட்ட காலமாக, அவள் குதிரையின் திருகாணியைத் தவறாகத் திருப்பி விட்டாள்.குதிரை துண்டு துண்டாக விழுந்தது. அவள் அரண்மனையிலேயே இருந்துவிட வேண்டியதாயிற்று. தன் காதலன் இனி என்ன நினைப்பானோ என்ற கலக்கத்துடன், அவள் வேண்டா வெறுப்பாக அங்கேயே தங்கினாள்.

பொன்மீளி இளவரசிக்காக நாளும் வாரமும்

காத்திருந்தான். அத்திடலில் அவன் காய் கனிகளை உண்டு திரிந்தான். தற்செயலாக அவன் ஒரு நாள் ஒரு பழத்தைத் தின்றபோது, அது அவனைக் கிழவனாக்கிற்று. ஆனால், அதுபோல இன்னொரு கனி அவனைத் தற்செயலாகச் சிறுவனாக்கிற்று. இரண்டையும் வேண்டிய அளவில் தின்றால், என்ன வயது என்ன வடிவம் வேண்டுமானாலும் பெறலாம் என்று அவன் கண்டான்.

சிறுவனுருவிலேயே அவன் தன் காதலியைத் தேட

முனைந்தான்.

நிலாச்செல்வியின் அரண்மனையில் சமையற்காரனா யிருந்த மீனவன் என்பவன் குழந்தையில்லாமல் வருந்தியிருந்தான். அவன் கப்பலில் வழிச் செல்லும் போது, பொன்மீளி இருந்த திடலில் இறங்கினான். பொன்மீளி துணையற்ற சிறுவன் என்று கேள்வியுற்று அவன் பொன்மீளியைத் தன் பிள்ளையாக ஏற்றுக் கொண்டான். பொன்மீளி அவனுடன் நிலாச்செல்வியின் அரண்மனைக்கே வந்தான்.

மீனவனுக்கு உடல் நலம் கெட்டு வந்தது. அவன் தன் இடத்தில் பொன்மீளியைச் சமையல் வேலையில் சில காலம் அமர்த்தினான். கிழவனாக்கும் கனியைப் பொன்மீளி அரசன் உணவில் கலந்து கொடுத்தான். அரசனும் நிலாச்செல்வியும் கிழவராயினர். இளமையுடன் அழகும் ஒளியும் போய் விட்ட படியால், நிலாச் செல்வியால் நகரம் ஒளி பெறவும் முடியாமல் போயிற்று.