உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் - 33

பொன்மீளியறியாமல் அந்த மாயச் சாயம் அவன் உடையில் பரந்திருந்தது. அவன் பிடிபட்டான். அரசன் முன் அவன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான்.

தானும் ஓர் அரசனேயாதலால், உண்மையை ஒப்புக் கொள்வதே நலம் என்று அவன் நினைத்தான். ஆனால் அரசன் கொல்லும்படி உத்திரவிட்டான்.

கொலைகாரரைப் பொன்மீளி ஆவல் காட்டி ஏய்க்க முனைந்தான். சாகுமுன் தன் அறையிலுள்ள செல்வத்தை அவர்களிடம் கொடுக்க விரும்புவதாகக் கூறினான். அவர்கள் அவன் அறைக்குச் செல்ல இணக்கமளித்தனர். ஆனால், அறை சென்றதும் அவன் மரக்குதிரை ஏறிப் பறந்தோடினான்.

கொலைகாரர் அவன் போனது பற்றிக் கவலைப்பட வில்லை. உண்மையிலேயே அவன் அறையில் பெருஞ்செல்வம் இருந்தது. அவர்கள் அதை எடுத்துக் கொண்டனர். ஓர் ஆட்டைக் கான்று அதன் குருதியை அரசனிடம் காட்டினர். பொன் மீளி கொலையுண்டதாக எண்ணி அரசன் அமைந்தான்.

பொன்மீளி மறுநாள் பகலில் வழக்கம் போல அரண்மனை மாடிக்கு வந்தான்.

எல்லோரையும் போலவே நிலாச் செல்வியும் அவன் காலை செய்யப்பட்டான் என்று எண்ணியிருந்தாள். அந்த எண்ணத்தினால் அவள் முழுவதும் மனக்கலக்கம் அடைந்திருந்தாள். ஆனால், அவனை நேரில் கண்டதும், அவள் ஒரு புறம் அதிர்ச்சியும், மறுபுறம் மகிழ்ச்சியும் உற்றாள். நடந்த செய்திகள் யாவற்றையும் அவன் அவளுக்குக் கூறினான். பின், "இப்போது என்னுடன் வருகிறாயா? என் நாட்டுக்குச் சென்று மணம் செய்து கொள்வோம்” என்று கேட்டான்.

அவள் இணங்கினாள்.

இருவரும் குதிரை மீதேறிச் சென்றனர். அது வானளாவப்

பறந்தது.

ஆனால், வெளியேறும் சமயத்தில் இளவரசி தன் வைர மாலையை எடுத்துவர மறந்தாள். அது அவள் குடும்பத்தின் மரபுரிமைச் சின்னமாதலால் அதை இழக்க அவளுக்கு மனம்