உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அப்பாத்துரையம் - 35

பின்னும் அவற்றைத் தின்னக் காத்திருந்தன. அச்சமயம் செங்கழுநீர் அவற்றினும் இன்னும் உயர்ந்த உணவை நீட்டினாள். அவை, அவள் கைக்கருகே வந்து சூழ்ந்து அதைப் பெற்றன. 'அன்புமிக்க அணங்கே, நீ யார், உனக்கு என்ன வேண்டும்?" என்று ஒரு மாமயில் கேட்டது. அதுவே மயில்களின் அரசனான கோமயில்.

66

66

தெய்வப் பறவையே, நான் என் தந்தையாலேயே புறக்கணித்து ஒதுக்கப்பட்டவள். இந்தக் காட்டில் துணை யில்லாமல், இடமில்லாமல் தவிக்கிறேன். எனக்குத் தங்க ஒரு குடிசையும், வாழும் வாய்ப்பும் செய்துதரக் கோருகிறேன்" என்றாள் செங்கழுநீர்.

"மறு இரவே இது செய்கிறேன்" என்று கோமயில் வாக்களித்தது.

அன்று வழக்கத்தினும் மிகுதியாக உயர் உணவு கட்டையில் வட்டிக்கப்பட்டது. ஆனால், அன்று மயிலின் ஆரவாரம் கேட்கவில்லை. அவர்களும் மரத்துக்குள்ளிருந்து, “என்னவோ எதுவோ" என்று வியப்படைந்தார்கள். ஆனால், விடிந்ததும் விடியாததுமாக அவர்கள் வெளிவந்த போது, கண்ட காட்சியை நம்பமுடியவில்லை.நெடுநேரம் திகைத்தனர். அவர்கள்முன் மன்னர் மாளிகைகளைவிட வனப்புடைய மாளிகையும், மலர்ச் சூழலும் காணப்பட்டன. அவர்கள் வியப்பு அடங்குமுன் அதனினின்றும் தெய்வப் பெண்கள் போன்ற பணிப்பெண்கள் வந்தனர். “உங்கள் மாளிகைக்கே வாருங்கள். எல்லாம் சித்தமாய் விட்டது” என்று அவர்கள் செங்கழுநீரையும் போதணங்கையும் அன்புடன் இட்டுச் சென்றனர்.

இலுப்பை மூதணங்குக்குச் செங்கழுநீர் நாள்தோறும் சென்று கனிவுடன் வழிபாடாற்றினாள்.அவ்வொரு செயல் தவிர, அவள் வாழ்வு முழுவதும் புதிய மாளிகைக்கும், மலர் வனத்துக்கும் உள்ளே நடைபெற்றது. அவள் தேவைகள் யாவற்றையும் மற்றப் பணிப் பெண்டிரே முற்றிலும் கவனித்து வந்தனர். மூதணங்கின் வழிபாட்டைக்கூட நாளடைவில் போதணங்கே மேற்கொண்டு வந்தாள்.