உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

85

காலம் செங்கழுநீர் வாழ்வின்மீது நகையொளி பரப்பிற்று. அதே சமயம் அவளைப் புறக்கணித்த தந்தை வாழ்வின் மீது அது மெல்லமெல்லச் சீற்றங் காட்டிற்று. செம்மேனியின் செல்வம் கரைந்து வந்தது. அவன் கப்பல்களில் பல, ஒரு சூறாவளியில் சிக்கி அழிந்தன. அவன் வீழ்ச்சியடைந்தான். இன்னல்கள் இதனை அடுத்து விரைந்து பெருக்கமடைந்தன. வீடும் செல்வமும் மறைவுற்றன. மனைவியும் ஆறு புதல்வியரும் அவனும் கையில் காசின்றி, உதவுவார் இல்லாமல் திண்டாடித் திரிய வேண்டியதாயிற்று.

செங்கழுநீர், மயில்கள் வந்து மொய்த்த குட்டையை ஒரு குளமாக்க விரும்பினாள். அதற்காக எங்கும் கல்தச்சர், கொத்தர், திட்ட அளவையாளர்கள், கூலியாட்கள் ஆகியவர்களை வரவழைத்தாள். வேலை மும்முரமாகத் தொடங்கி நடந்து வந்தது.

ன.

காட்டு மாளிகையின் புகழும், அதன் தலைவியான இளஞ்சீமாட்டியின் புகழும் இதற்குள் எங்கும் பரவிவிட்ட குளத்தின் பணியில் அமர்ந்தவர்களுக்கு நல்ல கூலி கிடைத்ததென்ற செய்தியும் எங்கும் பேராயிற்று. வாழ்வுக்கு அலைந்த செம்மேனிக்கு, அத் தலைவி தன் புதல்வியே என்பது ஒரு சிறிதும் தெரியவராது தன் ஆராக் கொடுஞ்செயலால் அவள் இதற்குள் இறந்திருப்பாள் என்றே அவன் உறுதியாக நம்பினான். ஆகவே, குளப்பணியில் கூலிவேலை பெற்றுப் பிழைக்கும் ஆர்வத்துடன் அவன் நடந்தான். அவன் மனைவியும், புதல்வியரும் அவனுடன் சென்றனர்.

அவர்களைப் போலவே வேலைநாடி வந்தவர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு சென்றிருந்தனர். வேலைக்காரரைத் தேர்ந்தெடுக்கும் பணிமுதல்வர் ஒவ்வொருவராக அழைக்கும்வரை அவர்கள் வரிசை வரிசையாக நின்றனர்.செங்கழுநீர் அச்சமயம் தன் மாடிப் பலகணியில் வந்திருந்து வேலையைக் கவனித்திருந்தாள். அவள் கண்கள் தற்செயலாக, வேலைநாடி நின்றவர் மீது சென்றது. தன் செல்வத் தந்தையையும், தாய் தமக்கையரையும் அந்தக் கும்பலில் கண்டபோது அவள் திடுக்கிட்டாள். உடனே பணிப் பெண்களை விட்டு அவர்களை அழைத்து வரச் செய்தாள். “நாம் தெரியாமல் என்ன குற்றம் செய்தோமோ? தலைவி என்ன தண்டனை தரப் போகிறாளோ? ஒருவேளை குளப்பணிக்குத்