உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அப்பாத்துரையம் - 35

தம்மைப் பலியிடத்தான் கருதினாளோ?" என்று அவர்கள் நடுநடுங்கிக் கொண்டே வந்தனர்.

கட்டிக்கொண்டு,

செங்கழுநீர், தந்தை காலில் விழுந்து வணங்கினாள். தாயையும் தமக்கையரையும் கட்டிக் கொண்டு, "ஐயோ! உங்களை நான் இந்தக் கோலத்தில் பார்க்க நேர்ந்ததே” என்று கலங்கினாள். காட்டு மாளிகைத் தலைவி செங்கழுநீரே என்பதைக் கண்டு, அவர்கள் ஒருபுறம் மகிழ்சசியும், மற்றொருபுறம் வெட்கமும் அடைந்தனர். ஆனால், செங்கழுநீரின் அன்பு அவர்களை விரைவில் ஆட்கொண்டது. அவள் அவர்களுக்குப் புத்துணவு, புத்தாடை வழங்கினாள். பலவகையிலும், அவர்கள் இன்னல்களை மறக்கடித்தாள். நகருக்கு ஆள் அனுப்பித் தந்தையின் செல்வ முழுவதையும் மீட்டும் அவர்களுக்கு வாங்கித் தந்தாள். அவர்கள் அடைந்த ன்னல்கள் யாவும் டைக்காலத்தில் அவர்கள் கண்ட ஒரு கனவோ என்று எண்ணும்படி மறைந்தன.

வணிகன், தன் மகளிடம் தனக்கு நேர்ந்த இன டையூறுகளை விளக்கிக் கூறினான். அவளும் காட்டில் தனக்கு நேர்ந்தவற்றை எடுத்துக் கூறினாள். "செங்கழுநீர், முன்பு, தன் இன்பத்துக்குத் தன் நற்பேறே காரணம் என்று கூறியது முற்றிலும் உண்மையே” என்பது வணிகனுக்கு இப்போது தெரிந்தது. தான் அறியாது இழைத்த தவற்றுக்கும், கொடுமைக்கும் அவன் இப்போது வருந்தினான். மற்றப் புதல்வியரைவிடச் செங்கழுநீரிடம் மிகுதி அன்பும் மதிப்பும் கொண்டான்.

புதல்வியருடனே நகரில் வாழ்ந்தாலும் அடிக்கடி காட்டுக்கு வந்து அவளையும் கண்டு அளவளாவினான். ஆனால், மீட்டும் நகருக்கு வரும்படி, அவன், அவளை அழைத்தபோது, அவள் நயமுடன் மறுத்துவிட்டாள். “காடு தந்த செல்வம் இது; ஆகவே, நான் இந்தக் காட்டைவிட்டு வருவது நல்லதன்று; மேலும், நாட்டில் இருக்கும் வாய்ப்புகளைவிட இங்கு எல்லாம் மிகுதியாகவே உள்ளன" என்று அவள் விளக்கம் தந்தாள்.

மகள் தந்த செல்வத்தால் வணிகன் செம்மேனி மகிழ்ச்சியடைந்தான். ஆனாலும், இழந்த செல்வத்தைத் தன் முயற்சியால் மீட்டும் பெற அவன் துடித்தான். ஆகவே, பெரும் பொருட் குவையுடன் அவன் பல கப்பல்களை அமர்த்தினான்.