உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

87

அவற்றுடன் வாணிகம் நாடித் தொலை நாடு செல்லப் புறப்பட்டான்.

வணிகன்

கப்பல்கள் துறைமுகத்தில் நின்றன. மனைவியிடமும், ஆறு புதல்வியரிடமும் விடைபெற்றக் கொண்டான். ஒவ்வொருவருக்கும் அவன் தனித்தனியாகப் பிரிவு நேர ஆறுதல் மொழிகள் புகன்றான். “திரும்பி வரும் போது உங்களுக்குத் தக்க பரிசு கொண்டுவர விரும்புகிறேன். என்ன என்ன பொருள்களை நீங்கள் அவாவுகிறீர்கள்? அதைப் பெற்று வருவேன்” என்று அவன் ஒவ்வொருவரிடமும் கேட்டான். அவரவர் விருப்பப்படி நினைவுடன் பரிசு கைக்கொண்டு விரைவில் வருவதாக வாக்களித்தான்.

கப்பல்கள் பாய் விரிக்கக் காத்திருந்தன. ஆனால், போவதற்கு வாய்ப்பான திசையில் காற்று அடிக்கவில்லை. நாழிகையும் நாளும் கடந்தன. கப்பல்கள் புறப்பட்ட பாடில்லை. "இஃது என்ன தெய்வக் கோளாறோ?" என்று செம்மேனி சிந்தித்தான். “மற்றப் புதல்வியரிடமே விடை பெற்றோம்; பரிசுறுதியும் வழங்கினோம்; நம் செல்வத்துக்கே காரணமான செங்கழுநீரிடம் விடையும் பெற மறந்தோம்; பரிசுறுதி கூறவும் இல்லை; இந்த நன்றி கொன்ற செயலைத்தான் தெய்வம் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்” என்று அவன் கருதினான்.

அவன் பயண ஏற்பாட்டை விட்டு விலக முடியவில்லை. ஆகவே, ஒரு தூதனைக் காட்டு மாளிகைக்கு அனுப்பினான். "அன்பு மகளே, நான் வாணிகம் நாடித் தொலை செல்ல இருக்கிறேன்.போகும் பரபரப்பில் அங்கே வர மறந்துவிட்டேன். அதை மன்னித்து, விடை தரும்படி வேண்டுகிறேன். அத்துடன் மற்ற புதல்வியர் விரும்பும் பொருள்களை வாங்கி வருவதாக உறதி கூறிச் செல்கிறேன். நீயும் உனக்கு விருப்பமான பொருளைச் சொல்; அதை வாங்கி வருவேன்” என்று தூதன் மூலம் அவன் சொல்லியனுப்பினான்.

தூதன் செல்லும்நேரம் செங்கழுநீர் அடுப்பில் எண்ணெய்ச் சட்டியுடன் ஊடாடிக் கொண்டிருந்தாள். ஆகவே, தூதன் சொற் கேட்டதும், “மகிழ்ச்சி! அப்பா நன்றாகப் போய் வெற்றியுடன் மீளட்டும்” என்று கூறினாள். தூதன், “என்ன பரிசு வேண்டும்?”