உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

|-

அப்பாத்துரையம் - 35

பாணன் உழையாதிருந்தும் வயல் செழித்துக் கொழித்து வளர்ந்தது. அது கண்டு ஊரார் வியப்படைந்தார்கள்.

பாணன் இப்போது பெயரளவில் பெருஞ்செல்வனாகவே இருந்தான். ஆனால், அவன் நிலங்கள் இன்னும் ஊதியம் தரவில்லை. அரசன் கொடுத்த முன்பணம் அவன் பிழைப்புக்கே பற்றவில்லை. வேறு வேலை செய்யாததால், வீட்டு வறுமை முன் இருந்தபடியே கிட்டத்தட்ட நீடித்தது.

முதல் அறுவடையுடன் வறுமை தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தோடு அவன் நாட்கழித்தான். ஆனால், அறுவடையில் அவனுக்கு ஒரு புதிய இக்கட்டுத் தோற்றிற்று. அதற்காக வேலையாட்கள் தேவைப்பட்டனர். வேலைக்கு அவன் ஆட்களை அழைத்தான். அவர்கள் “பணம் கொடு" என்றனர். “என்னிடம் இப்போது ஏது பணம்? எனக்கு இது முதலாண்டு! ஆனாலும், அறுவடை நல்ல அறுவடை என்றே தோற்றுகிறது. அறுத்தவுடன் உங்கள் பங்குக்கு நெல் தந்து விடுகிறேன்” என்றான்.

எல்லா நிலக்கிழாரும் பொன்னே கொடுத்தார்கள். அதுவும் முன்கூட்டிக் கொடுத்தார்கள். ஆகவே, கூலிக்கு நெல்லைக் கடனாக வாங்க யாரும் மறுத்தார்கள். பழனக் கிழான் மீண்டும் விழித்தான்.

அவனுக்கு உலகத்தில் ஒரே ஒரு நண்பன்தான் இருந்தான். அதுவே பேய் உலக நண்பனான அரசப் பேய். அவன் முன்னிரவில் அதை அணுகினான். தன் இக்கட்டைத் தெரிவித்தான். அரசப் பேயின் கனிந்த உள்ளம் அது கேட்கத் தாளவில்லை. அஃது இப்போதும் உதவ முன் வந்தது.

66

'அன்புமிக்க பாணனே, என் உதவியை நீ இதில் எதிர்பார்க்கலாம். நீ போய், வேலிக்கு நூறு அரிவாள் கொண்டு போய் நாளை மாலை வை, மற்றக் காரியம் நான் பார்க்கிறேன்” என்றது அது.

பாணன் அவ்வாறே செய்தான். அரசப் பேய், புங்கமரத்துப் பேய்களை அழைத்தது.“தோழர்களே, பாணனுக்கு நாம் செய்த உதவியால், நம் பேய் உடல் மறைந்து வருகிறது. இன்னும் ஒரே ஓர் உதவிதான் செய்யவேண்டும். அதன்பின் பேய் உலகிலிருந்தே எனக்கும் உங்களுக்கும் விடுதலை கிடைக்கும். ஆகவே