உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

101

இம்மரத்தின் ஒரு பச்சைக்கிளையை முறித்துத் தாருங்கள்” என்றது அரசப் பேய்.

இஃது எளிதில் முடிந்தது. ஒரு செழுங்கிளையுடன் அரசப் பேய் பூவரசமரத்தை அணுகிற்று. பாணன் பழனக்கிழான் கையில் அதைக் கொடுத்தது.

பாணன், அரசப் பேய்க்குப் பன்முறை வணக்கம் தெரிவித்தான். “பேய் வடிவில் உள்ள உன் வள்ளன்மையில் ஒரு சிறு கூறு இந்தப் பேய் மனிதரிடம் இல்லையே! உன் புகழ் வானுலகு மட்டும் ஓங்குக!" என்று வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினான். வாழ்த்திய வண்ணம் அகமகிழ்ச்சியுடன் வீடு சென்றான்.

புங்கமரத்தை நாடிச் சென்றபோது, அவன் மனைவியிடம் சொல்லிச் செல்லவில்லை. அவன் போனபின்பே, பூவணிக்குச் செய்தி தெரியவந்தது. வறுமையானாலும் கணவனை இழக்க எந்தத் தமிழ் நங்கைதான் ஒருப்படுவாள்! "ஐயோ, வறுமை போதாதென்று, இந்தக் கண்ணராவிக் கோலமும் வேண்டுமோ?" என்று அவள் அழுதாள்.

ரவிலேயே கணவன் வந்தது கண்டு அவள் மகிழ்ந்தாள். கையிலுள்ள கிளையைக் கண்டதும் புரியாமல் விழித்தாள். பாணன் மனமகிழ்ச்சியுடன் நடந்த செய்திகளைக் கூறினான். தன் வறுமை ஒழிந்தது என்று கூறி அவளையும் தேற்றினான்.

மறுநாள் பாணன் உயிருடன் வருவது கண்டே, தலைவன் வியப்படைந்தான். பச்சைக்கிளையை கண்ட போது, அவன் தன் கண்களை நம்பமுடியவில்லை. அவன் தன் பணியாட்களுடன் புங்கமரம் சென்று பார்த்தான். கிளை அந்த மரத்தின் கிளைதான். முந்திய இரவு ஒடித்ததுதான் என்பது அவனுக்கு விளங்கிற்று. அவன் வாக்குறுதி செய்திருந்தபடியே, ஆறுவேலி நிலத்தைப் பழனக் கிழானுக்குக் கொடுத்தான். அது பயிராகும் வரை, முதலாண்டு வாழ்க்கைக்கான ஒரு சிறு தொகையும் அளித்தான்.

அரசப் பேய் பழனக்கிழானுக்கு நேரிடையாகச் செய்த உதவியுடன் அமையவில்லை. சோம்பேறியான பாணன் வயலுக்கு ஒழுங்காக நீர் பாய்ச்சவில்லை; உரம் போடவில்லை; அரசப் பேயே புங்கமரத்துப் பேய்களின் உதவியுடன் எல்லாம் செய்தது.