உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

||–

அப்பாத்துரையம் - 35

அண்டி அவதியுற வேண்டாம்; யாரையும் பாட வேண்டாம். பேய்கள் குடியிருந்த மரம் புங்க மரமல்ல. இனி பாண் மரம்; அதைப் பாடு; அதைப் பாதுகாக்க ஏற்பாடு செய்; உனக்கு ஏழு தலைமுறைக்கு வேண்டிய செல்வம் தந்திருக்கிறோம். அத்துடன் உனக்குச் செய்த உதவி எங்களுக்குச் செய்த உதவியே. அதன் நலங்களின் பயனாய், நான் இந்திரர்களுள் ஒருவனானேன். பாண்மரப் பேய்களே கந்தருவர், கின்னரர் ஆயினர். உனக்கு எங்கள் வாழ்த்துக்கள். நீயும் உன் மனைவி மக்களும் நீடூழி வாழ்க!” என்று நறுக்கில் எழுதி இருந்தது.

பாணனுக்கு அப்போது பிள்ளை இல்லை. ஆகவே நீயும் உன் மக்களும் என்ற சொற்றொடர் அவனுக்கு ஒரு புது வாழ்த்தாகவே தோன்றிற்று. அதை அவன் பூவணிக்குப் படித்துக் காட்டிமகிழ்ந்தான்.

இந்திரனாய்விட்ட அரசப்பேயின் வாக்குப் பொய்க்க வில்லை. அவர்களுக்கு ஆண் பெண் மகவுகள் பல பிறந்தன. அவர்கள் தலைவனை விடச் செல்வராயினர். தலைவனுக்குத் தோட்ட வெளியிலேயே வீடு கட்டியிருந்தனர். ஆனால், அதற்கீடாகப் பாண்மரத்துக்கும், அரச மரத்துக்கும் வேலிகட்டி அவற்றைத் தமிழ்க் கோயிலாக்கினர்.

இரு மரங்களையும் வாயார அவன் இரு கவிதை நூல்களால் பாடினான். 'அரசமரக்கோவை’, ‘பாண்மரக் கோவை' என அவை பெயரிடப்பட்டன. தமிழ் மீண்டும் தழைக்கத் தொடங்கிற்று. பேய்கள் இவ்வாறு மனிதனுக்கு உதவி செய்தனவெனின், அஃது அம்மனிதனின் நல்வினையேயாகும்.

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிது யாதும் இல்லை பெறுவான் தவம்.

(குறள்.842)