உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. உயிர் மந்திரம்

கோனாடு என்ற வளமான நாட்டைக் கோடபதி என்று மன்னன் ஆண்டு வந்தான். அவன் முதல் மனைவி இறந்தபின், இரண்டாவது ஓர் அரசிளஞ் செல்வியை மணந்துகொண்டான். முதல் மனைவி மூலம் அவனுக்கு நிகரிலி என்ற புதல்வனும், இரண்டாம் மனைவி மூலம் ஆரணி என்ற புதல்வனும் இருந்தனர்.

உலகம்

நிகரிலி வேட்டையிலும், நாடு நாடாக சுற்றுவதிலுமே பெரிதும் நாள்கழித்தான்.அவனுடன் அமைச்சன் புதல்வன் வானவன், படைத் தலைவன் புதல்வன் வளவன், கோனாட்டின் பெரிய வணிகச் செல்வன் புதல்வன் செம்பியன் ஆகிய மூவரும் எப்போதும் ஊடாடினர். அவர்களுடனேயே அவன் எங்கும் அலைந்து திரிந்தான்.

நிகரிலியே மூத்த புதல்வனானாலும், புதிய அரசி தன் புதல்வனையே இளவரசனாகப் பட்டங்கட்ட விரும்பினாள். நிகரிலியின் நாடோடி வாழ்வை இதற்குரிய சாக்காகக் காட்டினாள். கோடபதி மற்றெல்லாச் செய்திகளிலும் பெரும்பாலும் அரசியின் விருப்பப்படியே நடந்து கொண்டான். ஆனால், நிகரிலி வகையில், மட்டும் தயங்கினான். ஆயினும் நிகரிலியே அரசி பக்கம் நின்று பேசினான். “எனக்கு நாடோடி வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது, அப்பா! அதற்கு வேண்டிய துணைவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு வழிச் செலவும், திரும்பி வந்தால் தங்கும் இடமும் அளித்தால் போதும். தம்பி ஆரணியே நாட்டுரிமை பெறட்டும்” என்றான்.

மனைவி விருப்பத்துடன் மகன் கருத்தும் ஒத்திருந்ததால், அரசன் இணங்கினான். ஆரணிக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. நிகரிலி விழாவில் உடனிருந்து மகிழ்ந்து வாழ்த்துரை கூறினான். அதன்பின் தந்தை, அரசி, தம்பி

=