உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(106)

||-

அப்பாத்துரையம் - 35

ஆகியவரிடமும் உற்றாரிடமும் பிரியா விடை பெற்று, நாடு கடந்து உலாப் புறப்பட்டான். நண்பர் மூவரும் அவனுடனே சென்றார்கள்.

தொண்டித் துறைமுகத்திலே அவர்கள் கப்பலேறினர்.பல தீவுகளையும் நாடுகளையும், மலைகளையும் காடுகளையும் கடந்து அவர்கள் மேலும்மேலும் சென்றார்கள். இறுதியில் அவர்கள் கன்னிப்போத்தம் என்னும் நாட்டில் எங்கும் காணாத ஒரு காட்சி காண நேர்ந்தது. அஃது அவர்கள் வாழ்க்கையையே மாற்றத்தக்க நிகழ்ச்சியாயிருந்தது.

கன்னிப்போத்த நாட்டின் காடுகள் மிகவும் அடர்த்தியாய் இருந்தன. அவர்கள் குதிரைகள் அவற்றைத் துளைத்துக் கொண்டு செல்ல முடியவில்லை. அரும்பாடுபட்டு, அதில் அவர்கள் தாமே காடுவெட்டி வழியமைத்துக்கொண்டு மெல்லமெல்ல முன்னேறினார்கள்.

ஒருநாள் திடீரென்று காட்டில் அடர்த்தி குறைந்தது. காட்டெல்லையை அவர்கள் எட்டிப் பிடிக்கவில்லை. காட்டின் நடுவில் உள்ள ஓர் அகல்வெளிதான் அவர்கள்முன் காட்சி யளித்தது. அதன் நடுவே ஒரு பாழடைந்த காளிகோயில் இருந்தது?

பாழடைந்த

ம்

நிலையிலும் அதன் மதில்களு மண்டபங்களும் பாரித்த கட்டுமானத்தின் சின்னங்களாயிருந்தன. நடுக்கட்டுக் கிட்டத்தட்ட அழியாமல் இருந்தது. ஆனால், அது பூட்டப்பட்டுக் கிடந்தது.

தோழர்கள் குதிரைகளைப் புறவாரங்களில் கட்டினார்கள். நடுக்காட்டைச் சூழ்ந்த மேடைகளின்மீது அவர்கள் ஏறிய மர்ந்தார்கள். குதிரைகளுக்குத் துனியிட்டுத் தாமும் உண்டபின், அவர்கள் அம் மேடையிலேயே இராத் தங்க முடிவு செய்தார்கள்.

நால்வருக்குமே களைப்பு மிகுதியாயிருந்தது. யாவருமே

உறங்கத்தான் விரும்பினர். ஆனால், அவர்கள் இருந்த இடங்கூடப் பாதுகாப்பான தாய் இல்லை. அத்துடன் அவர்கள் கண் மூடினால் குதிரைகள் காட்டு விலங்குகளுக்கு இரையாகக் கூடும். ஆகவே, அவர்களில் மூவர் தூங்குவது என்றும், யாமத்துக்கு ஒருவர் விழித்துக் காவலிருப்பது என்றும் திட்டம் செய்து கொண்டனர்.