உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

123

வெறிகொண்டு பின்னும் ஆடினான். பின்னும் தோற்றபின் அவனும் சிறைக் கூடத்துக்குச் செல்ல வேண்டியவனானான். மன்னனைச் சிறைப்படுத்தக் காவலர் தயங்கினர். ஆனால், கொங்குலாமலர் புன்முறுவல் பூத்தாள். “மன்னனுக் குரிய சிறைக்கூடம் அதுவன்று; காவல் வீரர்களே! அவருக்கு உயிர்த் துடிப்புடைய சிறைக்கூடம் இருக்கிறது; அஃது, அவர் தன்னுரிமையைப் பறிக்கும். ஆனால், அரசுரிமையை அளிக்கும். நண்பர்கள் விடுதலையைக் கூட அன்புப்பரிசாக அளிக்கும் என்றாள்.

""

காவலர் இளரசியின் சொற்கள் விளங்காமல் விழித்தனர். அரசனும் விழித்தான். ஆனால், கொங்குலாமலர் நயம்பட விளக்கித் தன் மெய்ம்மையையும் அவன் அறியும்படி செய்தாள்.

“அரசே! தாங்கள் நீதி தவறாதவர்கள். கொள்கை உறுதி, சொல்லின் உறுதி உடையவர்கள் என்பதைக் குடிகள் வகையில்கூடக் காட்டியிருக்கிறீர்கள். ஆனால், அயல்நாடுகள் செல்லும் சமயம் இந்தப் பண்பை உங்கள் நாட்டிலேயே வைத்துவிட்டுப் போனீர்களா?” என்றாள்.

மன்னனுக்குத் திடீரென்று கொங்குலாமலரின் நினைவு வந்தது. அவளை நீரும் உணவு மற்ற நிலையில் விட்டு வந்தது அவனுக்கு ஆராக் கழிவிரக்கத்தையும், துயரையும் தூண்டிற்று. “நீங்கள் கூறுவது உண்மை, மாதரசியே! என்னையே நம்பியிருந்த ஒரு

பெண்மணிக்கு நான் கொடுத்த வாக்குறுதியைக் கரையவிட்டிருக்கிறேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். உண்மையில் அவளை அவளது கொடுமைக் குணம் காரணமாக நான் விட்டு வரவில்லை. அவள் அரக்கியருடன் வாழ்ந்திருந்தாள். அவளும் ஓர் அரக்கியாயிருக்கக்கூடும் என்ற அச்சத்தால்தான் அவ்வாறு விட்டுவர நேர்ந்தது. ஆயினும், பிழை பிழைதான். அவளைத் தேடிக் கொண்டுவர ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

கொங்குலாமலர் நகைத்தாள். அரசன் தன் தோழர் பிழையை இன்னும் ஒத்துக் கொள்ளாமல் மறைப்பது கண்டாள். அஃது, அவன் பெருந்தன்மையின் பயனே என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆயினும்,தான் இன்னார் என்பதை அறிவிக்குமுன், அவர்கள் மனத்தையும் மாற்ற விரும்பினாள்.