உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

||–

அப்பாத்துரையம் - 35

அவள் ‘பந்தய ஆட்டப் போட்டிக் கலைவாணி' என்ற விருதுப் பெயருடன் வாழ்ந்தாள். தெறிகட்டையாடத் தெரிந்தவர்களுக்கும், மன்னர் பெருமக்களுக்கும் ஆட்டப் போட்டி அழைப்புகள் அனுப்பினாள். போட்டிக்கு வருபவர் நூறு ஆயிரம் பொன் கட்டி ஆடவேண்டும் என்றும், தோற்றால் அதை இழக்கவேண்டுமென்றும் அவள் திட்டம் செய்தாள். அத்துடன் மிகுதிப் பணம் வைத்தாடித் தோற்று, பணம் செலுத்த முடியாதவர்களைக் காவலில் வைக்கும் உரிமையையும் அரசியலாரிடம் நாடிப் பெற்றாள்.

யாருக்கு உரிமை தருகிறோம் என்பதறியாமல், நிகரிலியே உரிமை இதழில் கையொப்பமிட்டான்.

தெறிகட்டை ஆடக் கலைவாணர் பலர் வந்து ஆடித் தோற்றனர். பலர் பணம் இழந்தனர். பலர் செல்வமும், வீடும் குடியும் இழந்தனர். அவள் புகழ் பெருக்கமுற்றது. செம்பியன், வளவன் வானவன் ஆகிய மூவரும் தெறிகட்டை ஆடுவதில் வல்லவர் என்ற இறுமாப்புக் கொண்டவர்கள். அவர்கள் வந்து ஆடினார்கள். ஒன்றிரண்டு தடவை கொங்கலாமலர் அவர்களை கெலிக்க விட்டாள். அவர்கள் ஆர்வ வெறி கொண்டு ஆடினார்கள். இதனால், மேன்மேலும் தோற்றபின்னும் அவர்கள் விடாது ஆடினார்கள். அவர்கள் செல்வ முழுவதும் கரைந்தது. மேலும் கொடுக்க நூறாயிரம் பொன் இல்லாதபடியால், சட்டப்படி அவர்கள் அவள் மாளிகையின் சிறைக் கூடத்திலேயே

காவலில் வைக்கப்பட்டனர்.

நண்பர்களை மீட்கும் எண்ணத்துடன் நிகரிலியும் புறப்பட்டான். அமைச்சர் தடுத்து விலக்க முயன்றனர், நிகரிலி கேட்கவில்லை. "நண்பர்களை மீட்பது என் நீங்காக் கடமை. மேலும், நான் வெற்றி பெறுவதில் ஐயமில்லை. ஆயினும், உம் உள்ளம் நிறைவுபடுத்த இடைக்கால அரசு ஏற்படுத்திச் செல்கிறேன்” என்றான். அமைச்சர் படைத் தலைவர் முதலியோர் ஓர் ஆட்சிக்குழுவாக அமைக்கப் பெற்றனர். பின் மன்னன் கொங்குலாமலர் மாளிகைக்குச் சென்றான்.

இளவரசி,மன்னனையும் சிலபல ஆட்டங்கள் கெலிக்கும்படி விட்டாள். பின் அவன் ஒவ்வொன்றாகத் தோற்றான்.பணமுற்றும் கரைந்தது. ஆத்திரத்தில் அரசுரிமையையும் வைத்துத் தோற்றான்.