உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

121

கொடுத்த நிகரிலியையே குடிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆகவே, நிகரிலி வந்ததும், அமைச்சர் அவனை வரவேற்று மணிமுடி சூட்டினார்.நண்பர்கள் உதவியுடன் அவன் நாடாள அமர்ந்தான். வேடன் உணவும்

காட்டில் விடப்பட்ட இளவரசிக்கு ஒரு வேடன் உ நீரும் கொடுத்துக் காப்பாற்றினான். அவன் உதவியுடன் அவள் நகருக்குள் வந்து இளவரசனைத் தேடினாள். நால்வரும் ஒன்று கூடி நகரை விட்டுச் சென்றதைக் கேட்டாள். முதலில் அவள் மனம் இடிவுற்றது. பின் அவள், தோழர்களின் உள்ள நிலையை ஊகித்தாள். அவள், அவர்களின் ஐயமனப் பான்மைக்காக வருந்தினாள். சிறப்பாகத் தன் காதலன் அவர்களுடன் சேர்ந்தது அவள் உள்ளத்தை வாட்டிற்று. ஆயினும் அவர்கள் அனுபவங் களை அவள் எண்ணிப் பார்த்தாள். பார்த்தபின், அவர்களை குறை கூறுவதில் பயனில்லை என்று கண்டாள். அவர்கள் தவற்றைத் தக்க முறையில் காட்ட வேண்டுமென்று அவள் துணிந்தாள்.

இளவரசன் அவளுக்குத் தன் நாடு, தாய் தந்தையர் முதலிய விவரங்களைத் தெரிவித்திருந்தான். ஆகவே, இளவரசி தக்க துணை தேடிக் கொண்டு பயணப்பட்டாள். கடல் கடந்து தமிழகத்தை அடைந்தாள். பலநாள் நடந்ததும் வண்டியேறியும் கோனாட்டின் தலைநகருக்கருகில் வந்து சேர்ந்தாள்.

தன்னைப் புறக்கணித்த காதலனைத் தானாகச் சென்று காண அவள் விரும்பவில்லை. குற்றமறிந்து அவனாக வரும்படி செய்விக்க எண்ணினாள். அத்துடன் தன்னை வெறுக்கும்படி அவனைத் தூண்டிய நண்பர்களையும் தண்டிக்க எண்ணினாள். இதற்கேற்ப அவள் ஒரு திட்டமும் வகுத்துக் கொண்டாள்.

அவள் தாய் வீட்டுச் செல்வத்தின் இரண்டு கூறு இன்னும் அவளிடத்தில் இருந்தது. ஒன்று அவளிடமிருந்து ஏராளமான அணிமணிகள்; மற்றொன்று அவளுக்கிருந்த கலைப் பயிற்சி. இவற்றைப் பயன்படுத்தியே அவள் திட்டம் உருவாயிற்று. அணிமணிகளில் சிலவற்றை அவள் விற்றாள். அதைக் கொண்டு ஒரு மாளிகை அமைத்துக் கொண்டாள். அவள் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்த கலைகளுள் “தெறிகட்டை” ஒன்று. அதன் ஓர் ஆட்டத் தொகுதியை அவள் வெள்ளி பொன் தந்தங்களால் செய்வித்துக் கொண்டாள்.