உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

II.

அப்பாத்துரையம் - 35

படுக்க வைத்து விசிறினான். செம்பியனை நகருக்கு அனுப்பினான். சிறிது நீரும் உணவும் கொணரும்படி கட்டளையிட்டான். செம்பியன் அவ்வாறே விரைந்து நகர் நோக்கிச் சென்றான்.

நகரையணுகியதும், செம்பியன் முதலில் ஓர் உணவகம் தேடிப் பசியும் விடாயும் தீர்த்தான். பின் அங்கே படுத்து ஓய்வு கொண்டான். திரும்பி வரும் எண்ணம் அவனுக்கு இல்லை. ஏனென்றால் அவனுக்கு உள்ளூர இளவரசி யிடம் நல்லெண்ணம் இல்லை. “மற்ற மூவரையும் போலவே இவளும் அரக்கியாகவே இருக்கக்கூடும். ஆனால் இவள், அவர்களைவிடக் கைகாரியாய் இருக்க வேண்டும். அவர்களை ஏமாற்றிவிட்டு, இளவரசனையும், மற்றவர்களையும் தானே ஏமாற்றத் திட்ட மிட்டிருக்கிறாள். மற்றவர்களிடம் இதைச் சொல்லிப் பயனில்லை. அவர்கள் எக்கேடாவது கெடட்டும். நம்மட்டில் தப்பினால் போதுமானது. னிது இளைப்பாறி, அவர்கள் வருமுன் வேறுநாடு சென்று விடுவோம்” என்று அவன் எண்ணினான்.

நெடுநேரம் வரை இளவரசன் செம்பியனுக்காகக் காத்திருந்தான். பின் அவனைத்தேடி வளவனை அனுப்பினான். வளவனும் உணவகம் வந்தான். உணவருந்தியபின் அவன் செம்பியனைக் கண்டான். செம்பியன் தன் கருத்தைக் கூறி அவன் மனத்தையும் மாற்றினான். இளவரசன் பின்னும் நெடுநேரமான பின் வானவனை அனுப்பிப் பார்த்தான். அவனும் திரும்பி வராதது கண்டு தானே அவர்களைத் தேடி உணவகம் வந்தான்.

செம்பியன் வாதத்தை வானவனும் ஏற்றிருந்ததனால், மூன்று நண்பர்களும் சேர்ந்து இளவரசன் மனத்தைக் கரைத்தார்கள். உயிருக்குயிரான நண்பர்களின் அச்சம் அவன் உறுதியையும் மாற்றிற்று. நான்கு நண்பர்களும் இளவரசியைப் புறக்கணித்தவர்களாய், முன்போலத் தம் பயணத்தை மேற்கொண்டு தொடர்ந்தனர்.

மேலும் பல நாடுகள் சுற்றியபின், அவர்கள் தம் நாட்டுக்கு மீண்டார்கள். அவர்கள் பயணம் புறப்பட்டதற்கப்பால்,கோடபதி மன்னன் காலமாயிருந்தான். அரசியும் ஆரணியும் கொடுங்கோலாட்சி செய்ததனால் மக்கள் அவர்களைத் துரத்திவிட்டு, தற்காலிக ஆட்சிக்குழு அமைத்திருந்தனர். பெருந்தன்மையுடன் ஆட்சியுரிமையைத் தம்பிக்கு விட்டுக்