உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

119

இளவரசன் அறைக்கு அவர்கள் ஓடி வந்தனர். இளவரசனையும், இளவரசியையும் ஒருங்கே காணாமற் போகவே, அவர்களுக்கு உண்மை சுரீர் என்று தைத்தது அவர்கள் கடற்கரைக்கு ஓடி வந்தார்கள். கடலில் இளவரசனும், இளவரசியும், தோழர்களும் படகில் தப்பி ஓடுவதைக் கண்டார்கள்.

அவர்கள் கடலில் இறங்கிப் பார்த்தார்கள். பத்திருபதடிக்கு மேல் செல்ல முயவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் கழுத்தை அரைநாழிகைத் தொலை நீட்டினார்கள். படகு அதற்கப்பால் சென்றுவிட்டது.

படகில் உள்ளவர்கள் அவர்களைக் கண்டுவிட்டார்கள். அவர்கள் மூச்சு, படகிலுள்ளவர்கள் மேல் வீசிற்று. அத்துடன் அரக்கியர் கைகளையும் நீட்டிப் படகை எட்டிப் பிடிக்க முயன்றார்கள். கைகள் ஒரு நாழிகைத் தொலை நீண்டன. அவை கிட்டத்தட்டப் படகின் அருகுவரை எட்டின. ஆனால், படகைப் பிடிக்கும் முயற்சியில் கை வழுக்கிற்று. அதே சமயம் அவர்கள் கைபட்டுப் படகுகள் மேலும் முன் சென்று விட்டன.

அரக்கியர் ஏமாற்றமடைந்தனர். சீறி எழுந்து கரையிலிருந்து கற்களை சீவி எறிந்தார்கள். கற்கள் பெரும்பாலும் அருகில் விழுந்தன; அல்லது குறி தப்பின ஒன்று மட்டும் படகின் அருகில் விழுந்து படகோட்டிகளில் ஒருவனைக் காயப்படுத்திற்று. தோழர்கள் பதைபதைத்து, அவன் காயங்களைக் கட்டி ஆற்றினர். அவனுக்குப் பெரும்பொருள் தருவதாக வாக் களித்தனர்.

கப்பல்,

திமிங்கில வேட்டையாடும் கப்பல். வழிப்போக்கர்களே அதில் கிடையாது. ஆகவே, அவர்கள் அடுத்த தங்கு துறையிலேயே தோழர்களையும், இளவரசியையும் இறக்கிவிட்டனர்.

அவர்கள் கரையேறிய இடத்தில் மனிதர் குடி எதுவும் காணவில்லை. கரையிலிருந்து அவர்கள் நெடுந்தொலை சென்றனர். தொலைவில் அவர்கள் ஏதோ ஒரு நகரத்தைக் கண்ணுற்றனர்.நம்பிக்கைக் கொண்டனர். ஆனால்,நடந்ததறியாத இளவரசி இதற்குள் முற்றிலும் களைத்துச் சோர்ந்து விழுந்தாள். இரண்டுநாள் உணவும் நீரும் இல்லாததால் கண் இருண்டது. வாய் உலர்ந்தது. பேச முடியாத நிலையில் அவள் தண்ணீர் வேண்டும் என்று சாடை கட்டினாள்.இளவரசன் அவளைக் கீழே