உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

||–

அப்பாத்துரையம் - 35

அறிந்து கொள்ள வழி கூறுகிறேன். உங்கள் நண்பர்கள் ஓரிரவு தூங்காமல் தூங்குவதுபோல் பாவித்து விழித்திருந்து பார்க்கட்டும்.பகலில் உண்ணும் மனித உணவு அரக்கியர்களுக்குச் சிறிதும் போதாது. ஆகவே, அவர்கள் இரவு முழுதும் அலைந்து தாலை சென்று பெரிய விலங்குகளை வேட்டையாடித் தின்றுவிட்டு வருவார்கள். அத்துடன் இரவு தூங்காததால் அவர்கள் பகலில் பெரும்பகுதியும் தூங்குவார்கள். என்னை இதே வகையில் நீங்கள் பார்த்துத் தேறலாம். விரைவில் உண்மையறிந்து என்னுடன் தப்பியோட வழி தேடுங்கள். இவ்வகையில்தான் ங்கள் நண்பர்கள் இடர் நீங்கும். உங்களுக்கும் எனக்கும் பாதுகாப்பு ஏற்படும்" என்று கொங்குலாமலர் கூறினாள்.

அவள் சொற்கள் கேட்டு, நிகரிலி வியப்படைந்தான். நண்பர்களுடன் அவன் கலந்து பேசினான். அவர்கள் தங்கள் தங்கள் காதலிகளைத் தேர்ந்து பார்த்தார்கள். அவர்கள் அரக்கியர்களே என்பது தெளிவாயிற்று. நிகரிலியும் எதிர்பாராத வகையில் கொங்குலாமலரைத் தேர்ந்து பார்த்தான். அவள் இளவரசிதான் என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது.

பகலெல்லாம் அரக்கியர் உறங்கியது அவர்களுக்கு வாய்ப்பாயிருந்தது. நால்வரும் இளவரசியுடன் கலந்து திட்டமிட்டனர். அதன்படி நாள்தோறும் அவர்கள் கடற்கரை சென்று கப்பல்களின் வரவை எதிர்பார்த்திருந்தனர். ஒருநாள் தொலைவில் அவர்கள் ஒரு பாய்மரம் கண்டார்கள். மேலாடைகளை நீண்ட கழியில் கட்டி அவர்கள் சாடை காட்டினார்கள். ஒரு படகு வந்து அவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது.

அப்போது மாலை நேரமாயிற்று. எந்த நேரமும் அரக்கியர் எழுந்து வந்துவிடலாம் என்று தோழர்கள் அஞ்சினார்கள். ஆகவே, படகை விரைந்து ஓட்டும்படி அவர்கள் படகோட்டிகளை ஊக்கினார்கள். மிக விரைந்து ஓட்டினால், பெரும் பணம் தருவதாகவும் கூறினர். அவர்களும் முழுவலுவுடன் விரைந்து தண்டுகைத்தார்கள். படகு அம்பு வேகத்தில் கப்பலை நோக்கிச் சென்றது.

அவர்கள் அச்சம் பொய்க்கவில்லை. உறங்கி எழுந்த அரக்கியர் தத்தம் துணைவர்களைக் காணாமல் தேடினர்.