உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

66

117

'அன்பரே, உம்மை நான் மனமார என் காதலராக ஏற்றுவிட்டேன். நீரும் என்னிடம் உண்மையான காதலராக இருந்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் நான் எத்தனையோ கூற வேண்டியிருக்கிறது. அவற்றைக் கூற நான் உண்மையில் துடித்துக் கொண்டிருக்கிறேன்!” என்றாள்.

நிகரிலி கொங்குலாமலரிடம் முற்றிலும் ஈடுபட்டே ருந்தான். ஆகவே, அவளை ஏற்பதாக உறுதி கூறினான். அதன்பின் அவள், நால்வரும் கேட்கக்கூடாது என்ற செய்திகளையெல்லாம் தனிமையில் விளக்கினாள்.

“என் அன்பரே, நீர் ஊகித்தது சரி! என்பெயர் எனக்கு என் தாய் தந்தையரிட்ட பெயர். அந்த மூவருக்கும் பெயரே கிடையாது. அவர்கள் அரக்கிகள். ஏதோ காதில்பட்ட பெயரையே மூன்றாக்கி வழங்குகின்றனர்.

"இந்த நகரத்தில் என் தந்தை அரசராயிருந்தார்; தாய் அரசியாய் இருந்தாள். இது வளங்கொழிக்கும் மக்கள் வாழும் நகராகவே இருந்தது. இந்த அரக்கியர் எங்கிருந்தோ வந்தார்கள். என் பெற்றோர் உற்றோர் நண்பர் யாவரையும் விழுங்கினர். மக்களையும் விலங்குகளையும் உயிரினங்களையும் ஒரு சில நாட்களில் விழுங்கி ஏப்பமிட்டார்கள்; இப்போது தொலை நாடுகளில் சென்று வயிறு நிரப்பிக் கொண்டுதான் இங்கே தங்குகிறார்கள்.

66

"உங்கள் நண்பர்களுக்கு இது தெரியாது. நீங்களும் திடீரெனத் தெரிவிக்கக் கூடாது. ஏனென்றால் அரக்கிகளுக்குச் சிறிது ஐயமேற் பட்டால், உங்கள் நண்பர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் எனக்கும் பேரிடர் ஏற்படும்.

"அவர்களை விட்டுத்தப்புவது எளிதன்று; அவர்கள் நினைத்த நினைத்த மனித உருவம் எடுக்க முடியும்; அவர்கள் கழுத்து அரைநாழிகைத் தொலைவரை நீள முடியும்; கைகள் ஒரு நாழிகைவரை நீள முடியும்; கால்கள் மணிக்கு அறுபது எழுபது கல் தொலை செல்ல முடியும்.

"இவ்வளவையும் நான் சொன்னதற்காக நீங்கள் நம்பி விட வேண்டாம். ஏனென்றால், அரக்கியரும் பல சொல்லி உங்கள் நண்பர் மூளையை மாற்றக்கூடும். நீங்களே முதலில் உண்மை