உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(116) |

அப்பாத்துரையம் - 35

ஆடையணிமணிகளும், அவர்கள், இளவரசியர் என்பதைக்

காட்டின.

இளவரசிகள் அவர்களை அன்பாதரவுடன் வரவேற்றனர். இனிய உணவும் நறுநீரும் அளித்தனர். ஒவ்வொரு மங்கையும் நண்பர்களுள் ஒருவரைத் தம் தோழராக ஏற்று, அவர்களைத் தத்தம் அறைக்கு இட்டுச் சென்றனர். நண்பர் நால்வருமே எதிர்பாராத இந்த இன்பத்தில் சொக்கித் தன் துன்பங்களை யெல்லாம் மறந்தனர்.

நண்பர்கள் பொழுது தங்குதடையற்ற இன்பத்தில் கழிந்தது. அவர்கள் கேட்டவற்றை எல்லாம் பெற்றார்கள். ஒரே ஒரு கட்டுப்பாடுதான் அவர்கள்மீது சுமத்தப்பட்டது. எக்காரணம் கொண்டும் அவர்கள் இளவரசியரை யார், எவர் என்று கேட்கப்படாது. அதுபோலவே நகரின் நிலை பற்றியும் உசாவக்கூடாது. முதலில் இக்கட்டுப்பாடு அவர்களுக்கு உறுத்திற்று. கட்டற்ற இன்பவாழ்வு அதை விரைவில் மறக்கடித்தது.

நிகரிலியாம் இளவரசை ஏற்ற இளவரசியின் பெயர் கொங்குலா மலர் என்று அவன் அறிந்தான். மற்ற இளவரசியர் பெயர்கள் வம்பார்குழலி, வண்டார்குழலி, மட்டார்குழலி என்று கூறப்பட்டன.

இளவரசன் தன் இளவரசியுடன் ஒருநாள் அறையில் அளவளாவிக் கொண்டிருந்தான். அப்போது அவன், ளவரசியிடம் அவர்கள் பெயர்களைப் பற்றி குறிப்பிட்டான். "கொங்கு! உங்கள் நால்வர் பெயர்களில் உன் பெயர் மட்டும் தனியாய் இருக்கிறது. மற்ற மூவர் பெயர்களும் ஒரே அச்சில் வார்த்தவைபோல இருக்கின்றனவே, முற்றிலும் நீ அவர்களில் ஒருத்தி யல்லவோ?" என்று கேட்டான்.

அவள் முகம் சட்டென்று கறுத்தது.

தன் கேள்வி தவறென்று கண்டு, அவன், பேச்சை மாற்ற முயன்றான். ஆனால், அவள் அவனை அருகே இழுத்துக் காதோடு காதாகப் பேசினாள்.