உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

115

வேண்டியதாயிற்று. அவர்கள் பலநாள் நடந்து கடற்கரையை அடைந்தனர்.

அங்கே, சிலநாள் காத்திருந்தபின், ஒரு கப்பல் தொலைவில் தெரிந்தது. கப்பலில் இருந்தவர்கள் காண, அவர்கள், தங்க மேலாடைகளை வீசிக் காட்டினர்.

கப்பல் நின்றது; படகு ஒன்று அவர்களை நோக்கி அவர்களை ஏற்றிச் சென்றது; ஆனால், கப்பலில் உணவில்லை. தண்ணீரும் போதவில்லை;அவர்கள் ஏறிய கடற்கரையிலிருந்தும் எதுவும் கிடைக்கவில்லை; இந் நிலையில் கப்பலோட்டிகள் அவர்களை அடுத்த நிலத்திட்டிலேயே விட்டுச் செல்ல விரும்பினார்கள்.

அடுத்தபடி கரையை அவர்கள் நெடுநாள் காணவில்லை. கண்ட போது அவர்கள் பேசாமல் கரையில் விடப்பட்டனர். புதிய இடம் எப்படி இருக்குமோ என்ற கவலையுடன் அவர்கள் நிலத்தின் உட்பகுதி நோக்கிச் சென்றார்கள்.

அணிமையில் அவர்கள் ஒரு பெரிய நகரத்தைக் கண்டனர். ஆனால், மனிதரையோ உயிரினங்களையோ, புல் பூண்டு களையோகூடக் காண முடியவில்லை. கடைகள் திறந்திருந்தன. கடைக்காரர் இல்லை வண்டிப் பேட்டைகளில் வண்டிகள் இருந்தன; குதிரைகளோ, வண்டிக்காரரோ இல்லை. சையரங்குகள் நடப்பதாகத் தோற்றின; ஆனால், ஆளற்ற மேளதாளங்களே இருந்தன. பாடுபவரும் இல்லை. கேட்பவரும் இல்லை.

நகரம் - சாவின் திருக்கோயிலாகக் காட்சியளித்தது.

ன்

அவர்கள் திகிலடைந்தனர். ஆயினும், யாரையாவது அல்லது எந்த உயிரினத்தையாவது காணும் அவாவு அவர்கள் மேன்மேலும் நடந்தார்கள். எல்லாவற்றையும் போலவே ஆளற்ற ஓர் அரண்மனையை அவர்கள் கண்டார்கள். அதன் கூடங்களை ஒவ்வொன்றாக அவர்கள் கடந்தார்கள். ஆறு கூடங்கள் வெறுங்கூடங்களாகவே இருந்தன. ஆனால், ஏழாவது கூடத்தில் எதிர்பாராத வகையில் நான்கு கட்டிலில் நான்கு மங்கையரை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அழகும்