உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

அப்பாத்துரையம் - 35

மூன்றாவது மந்திரத்துடன் தேர்வை முடித்துக் கொண்டுவிட வேண்டும் என்றே எல்லா நண்பர்களும் எண்ணினர். ஆனால், அரசிளஞ் செல்வன் நிகரிலி கேட்கவில்லை. "அன்பர்களே, இது காட்டுப் பன்றிதான். கரடியன்று. இதன் பிடியிலிருந்து தப்ப வழியுண்டு. இது மரத்திலேறாது. நீங்கள் முதலில் மரத்தின் உச்சிக்கிளையில் ஏறிக் கொள்ளுங்கள். நான் என் மந்திரத்தையும் தேர்ந்து பார்த்துவிட்டு, உடனே உங்களுடன் வந்துவிடுவேன்” என்றான்.

"நல்ல உயிர்த்தேர்வு!" என்று தலையாட்டிவிட்டு, மற்றவர்கள் மரங்களில் ஏறினார்கள். நிகரிலி மந்திரத்தைத் தொடங்கினான்.

66

மந்திரங்கூறி வாய் மூடுமுன் பன்றி, “ஆ” என உறுமிக் கொண்டு எழுந்தது.

அதன் முட்கள் நாற்புறமும் பாயத் தொடங்கின.

நிகரிலி பல மயிரிழைகள் தப்பியே மரத்தில் விரைந் தேறினான்.அப்படியும் முட்களுக்கு அவன் முழுதும் தப்பவில்லை. அவன் மரத்தில் ஏறிய இடமெல்லாம் குருதி தோய்ந்தது.

தேர்வு வெற்றிகரமாக முடிந்தது. காட்டுப் பன்றியின் உறுமல் நெடுந்தொலை சென்று அடங்கும்வரை அவர்கள் மரத்தில் இருந்தனர். பின் மெல்ல மெல்ல இறங்கினார்கள்.

மந்திரங்கள் நான்கினாலும் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் அறிந்தார்கள். ஓர் எலும்பிலிருந்து அவர்களால் அதற்குரிய உயிரினத்தைப் படைத்து உயிர் கொடுக்க முடியும். ஆனால், முதல் எலும்பு இல்லாமல் அவர்களால் எதுவும் செய்யமுடியாது. உயிர் வந்தபின், விலங்கின்மீது அவர்கள் மந்திரத்தின் ஆற்றலோ, அவர்கள் ஆற்றலோ எதுவும் இல்லை.

அந்தக் காட்டில் தங்க நேர்ந்ததற்காக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஒப்பற்ற விலை மதிப்புடைய அந்த மந்திரத்துடன் அவர்கள் மீண்டும் பயணம் தொடங்கினார்கள்.

பன்றியிடமிருந்து அவர்கள் மட்டுமே தப்பினர். அவர்கள் குதிரைகள் அதன் தாக்குதலுக்கு ஆளாயின. ஒன்றேனும் உயிர் தப்பவில்லை. அவர்கள் கால் நடையாகவே சல்ல