உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

113

முடியவில்லை. ஆனால், இதுவும் மற்றவற்றின் தொடர்ச்சிக்கோ வெற்றிக்கோ குந்தகம் விளைவிப்பதல்ல என்று அவர்கள் கருதினர்.

மற்ற நான்கு மந்திரங்களின் ஆற்றலையும் அவர்கள் செயல் தேர்வுமூலம் திட்டமாய் அறிய முனைந்தனர்.

அவர்கள் திட்டத்தின் கருமூலமாக, அங்கே ஓர் எலும்பு கிடந்தது. அதை வைத்துக்கொண்டு மந்திரத்தைத் தேர்ந்தாராயலாம் என்று செம்பியன் கூறினான். அவன் சித்தர் போலவே அதை முன் வைத்து அமர்ந்தான். தான் பாடம் பண்ணிய மந்திரத்தைக் கூறினான். அவன் முன் காட்டின் நாலாபுறமிருந்தும் எலும்புகள் வந்து குவிந்தன; அஃது என்ன விலங்கின் எலும்புகள் என்று கூற முடியவில்லை.

ரு

வளவன் தன் வேலையைத் தொடங்கினான். எலும்புகள் பொருந்தின. இன்னதென்று திட்டவட்டமாய் அறியமுடியாத ஒரு விலங்கின் எலும்புக் கூடாக அஃது, அவர்கள் முன் நின்றது. ஆனால், அஃது ஒரு புலியன்று என்பது தெளிவாயிற்று. விலங்கு இன்னதென்று தெரியாமல், அடுத்த மந்திரத்தை வழங்ககூடா தென்று செம்பியன் தடுக்க முயன்றான். ஆனால், வானவன் இதைக் கேட்கவில்லை. “அடுத்த மந்திரத்திலேயே இந்தச் செய்தி தெரிந்துவிடப் போகிறது. ஆனால், அப்போதும் அதற்கு உயிர் இராது. 'இத்துடன் நிறுத்த வேண்டுமா? வேண்டாமா?' என்பதை அப்புறம் பார்த்துக் கொள்வோம்" என்றான்.

வானவன் மந்திரம் பலித்தது. விலங்கின் முழு உருவமும் முன்னே நின்றது. அது கோர உருவமுடைய ஒரு காட்டுப்பன்றி. அதன் உடலின் முட்கள் அம்புகளைவிடக் கூர்மையும் கடுமையும் உடையவையாக இருந்தன. அதன் தந்தங்கள் யானைத் தந்தத்தை ஒத்த பருமனும் திண்மையும் ஒளியும் உடையவையாயிருந்தன. அதன் மேனி கார் முகிலைப் படிந்தது.

நண்பர்கள் அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்டனர். அதன் ஒரு திமிறலால் முட்கள் அம்புகள்போல் பத்துத் திசையிலும் பாயும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதே சமயம் அவர்களின் எந்தப் படைக்கலமும் துளைக்க முடியாத திண்ணிய கவசமாகவும் அம் முட்களும் அதனடியிலுள்ள தோலும் சதையும் அமைந்திருந்தன.