உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(112)

||-

அப்பாத்துரையம் - 35

கதிரவன் எழுந்தான். தன் வெங்கதிர்களைப் பரப்பினான். நிகரிலி தன் தோழர்கள் எல்லாரையும் எழுப்பினான். அவர்களுடன் வெளியே காட்டகம் சென்றான்.பாதுகாப்பான ஓர் இடந்தேடி அனைவரும் அமர்ந்தனர்.

அப்போது அரசிளஞ் செல்வன் மற்றவர்களுடன் இரவுக் காட்சி பற்றி அளவளாவினான். முதலில் செம்பியன் கண்டவற்றையும், பின் முறையே வளவனும், வானவனும் கண்டவற்றையும் அவன் கேட்டான். பின் அவன், தான் கண்டதையும் எடுத்துக் கூறினான்.

நாடகத்தின் நான்கு காட்சிகள்போல அவர்கள் கண்டவை ஒன்றை ஒன்று தொடர்ந்தன. முழு நாடகத்தின் போக்கும் அவர்களுக்கு நன்கு புலனாயிற்று.

முதல் யாமத்தில் கண்ட எலும்பு, புலியின் ஓர் எலும்பே, அந்த யாம இறுதியில், சித்தர் மந்திரத்தால், காட்டகத்தில் கிடந்த அதே புலியின் எலும்புகள் யாவும் வந்து குவிந்தன. இரண்டாம் யாமத்தில் அவையாவும் மற்றொரு மந்திரத்தால் அதே புலியின் எலும்புக்கூடாய் இணைந்தன. மூன்றாம் யாமத்தில் மூன்றாவது மந்திரத்தால் தசையும் குருதியும் தோலும் வண்ணமும் வந்து பொருந்தின. கடையாமத்தில் உயிர் மந்திரத்தால், சித்தர் அதற்கு உயிரூட்டி, அதைக் காட்டிற்கு அனுப்பினார்.

நாடகத்தின் முன்னிகழ்வும் பின்னிகழ்வும் உணர வேண்டி, அவர்கள் மீண்டும் ஓரிரவு காத்திருந்தனர். இத்தடவை ஒவ்வொருவரும் கண்டதும் கேட்டதும் மனத்தில் நன்கு பதியவைத்துக் கொண்டனர். உறங்கும்போது அவற்றைப் பாடம் செய்து கொண்டே உறங்கினர். அடுத்த பகலில் அவர்கள் மீட்டும் கூடிப்பேசினர்.

முதல் எலும்பு பகலின் கடையாமத்திலேயே ஒரு மந்திரத்தால் கோயிலுக்குள் வந்தது. அதன் மர்மத்தை அவர்கள் முற்றிலும் அறிய முடியவில்லை. ஆனால் இது மற்றவற்றின் தொடர்ச்சியைப் பாதிக்கவில்லை. கடையாமத்தின் இறுதியில் புலி சித்தர் பக்கம் திரும்பாமல், காட்டுக்குள் ஓடிற்று. இதையும் அவர்கள் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது சித்தர் தனி யாற்றலா, மந்திரத்தின் ஆற்றலா என்று அவர்கள் புரிய