உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

111

உயிரற்ற புலியுருவும் அவன் கவனத்தைத் தொடக்கத் திலேயே ஈர்த்தன.

66

"இந்த புலியுருவம் முன்பு இங்கே இருந்ததாகத் தெரியவில்லையே! எங்கிருந்து வந்தது? உயிரற்ற உருவம் விழுந்தல்லவா கிடக்கும்? இஃது எப்படி எழுந்து நிற்கிறது? அதற்கும் இந்தச் சித்தருக்கும் என்ன தொடர்பு?

"இஃது அவர் ஏறிச்செல்லும் ஊர்தியா? அப்படியானால், உயிரற்றிருப்பானேன்? உயிருடன் இருந்தால் அவரைக் கொன்று விடாதா?"

நூற்றுக்கணக்கான கேள்விகள் அவன் மனத்திரையில் எழுந் தெழுந்து மறைந்தன.

அவன் கேள்விகளுக்கிடையே கிழக்கு வெளுக்கத் தொடங்கிற்று. சித்தர் உருவில் துடிப்புத் தோன்றிற்று. அவன் அவரையே நோக்கினான். அவர் திடுமென கண்திறந்தார். ஒரு கை உயர்த்தி ஒன்றை முடக்கினார். கடகடவென்று சில சொற்கள் அவர் உதடுகளில் உருண்டன. அவர் முன்னின்ற வேங்கை மெல்லக் கண் திறந்துவால் ஆட்டிற்று. மயிர்கள் சிலிர்த்தன. பின் அஃது உடைைல நெளித்துக் கொண்டு, காடதிர உறுமிற்று.

அடுத்தகணம் அது மதில்தாண்டிப் பாய்ந்து வெளியே

ஓடிற்று.

அரசிளஞ் செல்வன் மெய்ம்மயிர் சிலிர்த்தது. அவன் தோள்கள் படபடத்தன. தன்னைப் போலத் தன் தோழர்கள் சித்தர் பக்கம் கண் திருப்பி இருப்பார்களா? என்ன கண்டிருப்பார்கள்?

இவற்றை அறிய அவன் அவாவினான்.

மேலும் என்ன நடக்கக்கூடும் என்று அவன் கவனித்தான். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. சித்தர் மீண்டும் ஒன்றும் அறியாதவர்போல அமர்ந்து கண் மூடினார்.

புலியின் உறுமல் விட்டுவிட்டுத் தொலைவில் கேட்டது. பின் அதுமெல்லப் பகலொளியின் அரவங்களுடன் கலந்து மறைந்தது.