உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(110

அப்பாத்துரையம் - 35

எலும்புக்கூடும் விரைவில் அவன் கவனத்தை ஈர்த்தன. 'முன் காவலிருந்த நண்பர்கள் இதைக் கவனித்தார்களோ, என்னவோ?' முன்னிரவில் புலியுருவம் இல்லை என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாய்த் தெரிந்தது. "இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அது மருங்கிலேயே நடைபெறுகிறது. அதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்" என்று அவன் முடிவு செய்தான்.

யாமம் எல்லையை அணுகி வந்தது. திரை அகலுவது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. ஓடும் காட்சிகளை அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கணங்கள் விரைந்தன. சித்தர் கண் திறந்தது. கை உயர்ந்தது. மறு கை சாடைகள் காட்டிற்று. வாய் முணுமுணுக்கத் தொடங்கிற்று. கங்காள உருவைச் சுற்றி மின்னொளிகள் விரைந்தன. வியக்கத்தக்க வண்ணம் தசை, தசை நார் குருதிநாளங்கள், நாடி நரம்புகள், தோல், தோலின் வண்ணம், கண் காது முதலிய உறுப்புகள் எல்லாம் பரபரவென்று எலும்புக்கூட்டைச் சுற்றி வந்து தோன்றின.

ஒரு வேங்கைப்புலியே அவன் முன் காட்சியளித்தது.

அவன் நாடி நரம்புகள் விதிர்விதித்தன. மெய் சிலிர்த்தது. மேலும் என்ன நடக்கப் போகிறதோ என்று அவன் கூர்ந்து பார்த்த வண்ணம் இருந்தான். ஆனால், அதன்மேல் ஒன்றும் நிகழவில்லை. சித்தர் மோன நிலையில் ஆழ்ந்தார். புலியின் உடல் உயிரற்ற உடலாகவே இருந்தது.

யாமம் முடியலாயிற்று. தான் பார்த்தவற்றின் முழு மெய்ம்மையும் காண அடக்க முடியா ஆர்வம் இவனுக்கு இருந்தது. ஆயினும் அமைச்சனின் ஒழுங்கார்வமும் அவன் குருதியில் ஓடிற்று. அவன் தன் விருப்பத்தை அடக்கிக் கொண்டு, அரசன் புதல்வன் நிகரிலியைத் தட்டி எழுப்பினான். அவனைக் காவல் வைத்துவிட்டு உறங்கினான்.

நிகரிலி மூன்று யாமமும் தூங்கி எழுந்திருந்தான். உறக்கத்தின் சோர்வு அவனிடம் முற்றிலும் இல்லை. அவன் கண்கள் திறந்தபடி இருந்தன. மூளையும் தெளிவாகவே இருந்தது. ஆனால், கனவிலும் காணுதற்கரிய ஒரு காட்சி அவன் கண்களில் பட்டது. கோயிலினுள் இருந்த சித்தர் உருவும் அவர்முன் நின்ற