உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

109

இறுதியை அணுகுவதற்குள் அவன் கண்களைச் சித்தர் உருவம் ஈர்த்தது. அவர் முன் குப்பைமேடுபோல் கிடந்த குவியலை அவன் கூர்ந்து கவனித்தான். அஃது ஏதோ ஒரு விலங்கின் எலும்புக் குவியலாய்த்தான் இருக்க வேண்டும் என்று அவன் மதித்தான். “அஃது என்ன விலங்காயிருக்கக் கூடும்? சிறு விலங்காய் இருக்க முடியாது, பெரு விலங்காய்த்தான் இருக்க வேண்டும். ஆனால், அது மானா, ஒட்டகமா? மாடா, எருமையா? முள்ளம்பன்றியா, கரடியா?" இவ்வாறு அவன் சிந்தனை செய்தான்.

சிந்தனை எல்லை காணவில்லை. ஆனால், அது காலத்தின் எல்லைக்கு அவனைக் கொண்டு சென்றது. அந்த எல்லை வருமுன் அமைதி கலைந்தது. காட்சி விரைந்தது.

சித்தர் கண் திறந்தார். ஒரு கை உயர்த்தி ஒரு கைமுத்திரை காட்டினார். முணுமுணுக்கத் தொடங்கினார்.எலும்புகள் யாவும் திடுமென உயிர்பெற்றவைபோல் துடித்தன. படைத் தலைவர் கட்டளை கேட்டு அணிவகுப்பில் இடம் பெறத் துடிக்கும் படைவீரர்கள்போல, அவை ஒன்றையொன்று இடித்துக் கொண்டு முந்தின. ஆனால், விரைவில் அவை ஒழுங்குபட ஒன்றன்மீது ஒன்று அடுக்கின. ஒரு திட்ட உருவமைய அடுக்கி இணைந்தன.

வளவன், தன் கண்களை நம்ப முடியவில்லை. குப்பை மேடாகக் கிடந்த எலும்புகள் ஒரே உருவாய்விட்டன. அஃது ஒரு புலி வடிவில் அமைந்தது; ஆம், அஃது ஒரு புலியின் எலும்பு கூடு.

அவன், மேலும் என்ன நடக்கும் என்று காணத் துடித்தான். ஆனால், எதுவும் நடக்கவில்லை. சித்தர் மீண்டும் அறிதுயிலில் அமர்ந்தார்.நின்ற எலும்புக்கூடு நின்று கொண்டேயிருந்தது.

அதன்பின் யாம எல்லை வந்துவிட்டது. தூக்கத்தைக் கெடுத்து இருக்க அவன் ஆர்வம் அவனைத் தூண்டிற்று. ஆயினும் திட்டப்படி நடப்பதே தக்கது என்று அவன் துணிந்தான். அமைச்சன் மகன் வானவனை அவன் எழுப்பினான். அவனைக் காவலிருக்க வைத்துவிட்டுப்படுத்து உறங்கினான்.

வானவன் காவலும் பெரும்பகுதி இது போலவே கழிந்தது. ஆனால், சித்தர் உருவும், அவர் முன் நின்ற புலியின்